அப்பா ஓர் அபூர்வ ராகம்

       
           அப்பா ஓர் அபூர்வ ராகம்

      அப்பா ஓர் அபூர்வ ராகம்
       அப்பாவின் ஒரு பாதி அம்மா 
       அன்பில் சமபாதி கிடைக்காத 
       ஆதரவற்ற குழந்தை என் அப்பா!
      
       தொலைத்தொடர்புக்கு அப்பால்
        தொலை தூரத்தில்  எப்போதும் அப்பா 
       தொலைத்தொடர்பு சாதனமாய்
       நிற்பவரோ என் அம்மா  !
                
       அப்பாவின் பார்வை மட்டுமே பேசும்
      அப்பாவைப்  பார்க்கவே கண்கள் கூசும்
      அப்பாவின் இதயத்தில் எப்போதும்
       அன்பு்  மட்டுமே இருக்கும்!
 
      பாரத்தைத் தோளில் தூக்கி
      பாசத்தை மனதில் சுருக்கி
      பவிசு காட்டத் தெரியாத 
      பாட்டாளி  ஜீவன் என் அப்பா!
       
      விட்டுக் கொடுக்கத் தெரியும்
      விலகியே நின்று பழகியதால்
      தொட்டுப் பேச முடியாமல்
      தொலைவிலேயே் நிற்பவர் என் அப்பா!
      
     வீட்டுத் தேர் ஓட்டும் சாரதி
      வீட்டிற்குள் வந்து விட்டால்
      வீடே அடங்கிப் போகும் 
     வார்த்தைகள் சுருங்கிப் போகும்!
 
     எம்மை  சும்மா வைத்து சோறு போட
    செக்கு மாடாய் சுற்றி சுற்றி வருவார்
     தனக்கென சுகம் காணா பிறவி
     வீட்டுக்காக வாழ்பவர் பெயர்தான் அப்பா!
     
          அப்பா ஓர் அபூர்வ ராகம்
          அப்பாவில் சரிபாதி அம்மா
         அன்பில் சமபாதி கிடைக்காத
         ஆதரவற்ற குழந்தை என் அப்பா!



Comments

Popular Posts