சின்ன சின்ன ஆசை

               சின்ன சின்ன ஆசை
         
        அசைந்து ஆடும் கொம்பில் தொங்கி
        ஆட்டம் போட ஆசை
        
        கயிறுபோல வீழும் துளியைக்
        கட்டி இழுக்க ஆசை
        
        வட்டம்போடும் குட்டி நிலவை
        எட்டிப் பிடிக்க ஆசை
        
        கண்ணைச் சிமிட்டும் வின்மீனோடு
        கதைகள் பேச ஆசை
        
        கானம் பாடும் குயிலோடு
        கவிதை பாட ஆசை
        
        மழைவிட்ட வானம்போல
       மனதை  வைக்க ஆசை
        
       நித்தம் வரும்  கதிரவனைக் கட்டி
       முத்தம் தந்துவிட ஆசை
       
      அணில் கொரிக்கும் கொய்யாவில்
      பங்கு கேட்டுச் சண்டைபோட ஆசை
        
      நிலவில் ஓடும் தண்ணீரை
      மொண்டு குடிக்க ஆசை
       
      பருந்தின் சிறகில் ஏறி நின்று
      பறந்து வர ஆசை
       
       ஓடும் மேகத்தை அள்ளி வந்து
       ஒளித்து வைக்க ஆசை
      
       காகிதப்  படகில் ஏறி சென்று
       கடற் காற்று வாங்க ஆசை  
       
       முறுக்கும் சிங்கத்தின் மீசையை
       இழுத்துப் பார்க்க ஆசை 

      பூமி உருண்டையைக் கையிலெடுத்து
      உருட்டிவிட ஆசை

       ஆசை ஆசை ஆசை 
       சின்ன சின்ன ஆசை
        

Comments