சமர்ப்பணம்
சமர்ப்பணம்
கண்கவர் ஆடல் கண்டேன்
கண்கள் இமைக்க மறந்தேன்
நினைவினில் நனைந்தேன்
நெஞ்சினில் கனிந்தேன்!
இசைத்தேன் கேட்டேன்
இசை தேனென வியந்தேன்
சங்கத்தமிழ் கேட்டேன்
சங்கமத்தில் சங்கமமானேன்!
முதுமையைக் களைந்தேன்
முதல்பருவம் புனைந்தேன்
தொலைவெனத் தவிர்த்தேன்
தொலைத் தேனென நினைத்தேன்!
கூட்டுத்தேன் பார்த்தேன் மலைத்தேன்
கூடுமலை தேனென வியந்தேன்!
வாழ்த்திட நினைத்தேன்
வாடாமலர் தேன் எடுத்தேன்
பாமாலை தொடுத்தேன்
பாதத்தில் சமர்ப்பித்தேன்!
செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment