ஆறிலும் சாவு நூறிலும் சாவு

                               ஆறிலும் சாவு நூறிலும் சாவு


வாழ்க்கை நிலையற்றது. இன்று இருப்பது நிஜம்.
     நாளை இருப்பது பொய்.
      இன்று செத்தால் என்ன?
      நாளை செத்தால் என்ன? ஆறுவதிலும் சாவு வரலாம்.
      நூறு வயதிலும் சாவு வரலாம்.
      இப்படி ஒரு கண்ணோட்டத்தில்தான் இந்த பழமொழியைச் சொல்லியிருப்பார்கள் என்றுதான் தோன்றும்.இது நமது பார்வை.
      ஆனால் உண்மை அது அல்ல.
      மகாபாரதத்தில் குருசேத்திர போர் நடைபெறப் போகின்ற வேளையில் குந்திதேவிக்கு தனது மூத்த மகன்தான் கர்ணன் என்ற உண்மை தெரிய வருகிறது.
      குந்திதேவி கர்ணனிடம் சென்று தன் சகோதரர்கள் ஐவரோடும் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்துப் போரிடும்படி வா என்று அழைக்கிறாள்.
      கர்ணன் குந்திதேவியோடு வர  மறுக்கிறான்.குந்திதேவி கூறிய காரணங்களையும் கர்ணனின் மனம் ஏற்க மறுக்கிறது.
      அந்தவேளையில் குந்தி தேவியிடம்,
      நான் பாண்டவர்களோடு சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறுபேரோடு சேர்ந்து போரிட்டாலும் சரி      இறக்கப்போவது உறுதி என்பது எனக்குத் தெரியும்.
     
      ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது உறுதி.சாவு வரப்போகிறது என்று தெரிந்த பிறகு நான் எப்படி செத்தால் என்ன?
      இவ்வளவு நாளும் சோறிட்டுப் வளர்த்த அந்த செஞ்சோற்றுக் கடனுக்காக என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனன் பக்கமே நின்று உயிர் விடுகிறேன் என்கிறான் கர்ணன்.
      இதுதான் இந்த பழமொழிக்கான உண்மையான பொருளாம்.
      உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை என்று சும்மாவா சொன்னார்கள்.
       

Comments

Popular Posts