நிறைகுடம் ததும்பாது

                   நிறைகுடம் ததும்பாது

குடத்தில் நீர் எடுத்துவரும்போது குடத்தில் நீர் குறைவாக இருந்தால் அங்கிட்டும் இங்கிடுமாக அலம்பும்.
      இடுப்பில் குடம் நிற்கவே நிற்காது. கீழே விழுந்து விடுமோ என அச்சமாக இருக்கும்
      ஆனால் குடத்தில் தண்ணீர் நிறைந்து இருந்தால் குடம் ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கும்.
      நம்மால் எளிதாக குடத்தைச் சுமந்து வர முடியும்.
      இதனைப் போன்றதுதான் மனிதனும்.
      நல்ல அறிவுள்ள ஒருவன் அடக்கமாக இருப்பான். எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ள மாட்டான்.
      ஆனால் அறைகுறை அறிவு இருக்கு பாருங்க....ஐய்யைய்யையோ.....அலப்புற அலப்பு தாங்க முடியாது. 
      தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பாவ்லா காட்டிக் கொண்டு திரியும்.
      சர் ஐசக் நியூட்டன் பற்றி நமக்குத் தெரியும்.
      புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.
      இங்கிலாந்து அரசு நாட்டின் உயரிய விருதான சர் பட்டம் அளித்து அவரை கௌரவித்தது.
      அவர் எப்போதும் எளிமையாகவே இருப்பார்.
      அவர் நான் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்பார்.
      கடற்கரையில் விளையாடும் ஒன்றும் அறியாத சிறுவனைப் போல்தான் இருக்கிறேன்  என்பார்.
     கூழாங்கற்களையும் சிப்பிகளையும் எடுத்து அவற்றுள் எது சிறப்பானது என தேர்வு செய்யும் நிலையில்தான் உள்ளேன்.
     ஆனால் உண்மை என்னும் பெருங்கடல் என்முன் விரிந்து கிடக்கிறது. அதில் கண்டுபிடிக்கப்படாதவை எவ்வளவோ உள்ளன என்று தன்னடக்கத்தோடு கூறுவார். 
     தான் கண்டுபிடித்ததைக் காட்டிலும் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை ஏராளம் உள்ளன என்பது அவர் கருத்து.
     இதைத்தான் நிறைகுடம் ததும்பாது என்பார்கள்.
      
      

Comments

Popular Posts