ஆறிலும் சாவு நூறிலும் சாவு


                     ஆறிலும் சாவு நூறிலும் சாவு


வாழ்க்கை நிலையற்றது. இன்று இருப்பது நிஜம்.

  நாளை இருப்பது பொய்.
  இன்று செத்தால் என்ன?
  நாளை செத்தால் என்ன? 

ஆறு வயதிலும் சாவு வரலாம்.

  நூறு வயதிலும் சாவு வரலாம்.

 இப்படி ஒரு கண்ணோட்டத்தில்தான் இந்தப்

 பழமொழியைச் சொல்லியிருப்பார்கள் 

என்றுதான் தோன்றும்.

மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான்

நினைக்கத் தோன்றுகிறது.

அப்படித்தான் இருக்குமோ?

இருக்காது....இதைச் சொல்வதற்குஒரு பழமொழியா?

அப்புறம் வேறு என்னவாக 

இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.?

நாங்கள் நினைப்பது இருக்கட்டும.

நீங்கள் நினைப்பதை எழுதுங்கள் என்பீர்கள்.

நான் நினைப்பதும் வேண்டாம்.

நீங்கள் நினைப்பதும் வேண்டாம்.

மகாபாரதத்தில் கர்ணன் என்ன சொல்கிறார்

என்பதைக் கேளுங்கள்.

மகாபாரதத்தில் குருசேத்திர போர் நடைபெறப் 

போகின்ற வேளை.

அப்போதுதான் குந்திதேவிக்கு தனது 

மூத்த மகன்தான் கர்ணன் என்ற உண்மை தெரிய வருகிறது.

குந்திதேவி தன் மக்கள் ஐவரோடும் சேர்ந்து

கௌரவர்களை எதிர்த்துப் போரிடும்படி கர்ணனிடம்

கேட்டுக் கொள்கிறார்.

கர்ணனுக்கு கௌரவர்களை

விட்டுவர மனமில்லை.

நேற்றுவரை அவர்கள் சாப்பாட்டை 

சாப்பிட்டுவிட்டு இன்று அணிமாற

மனமில்லை.

குந்திதேவி ஏதேதோ சொல்லி

அழைத்துப் பார்கிறார்.

கர்ணன் மனம் மாறுவதால

தெரியவில்லை.

குந்திதேவி சொல்லும் எந்தக் காரணங்களையும் 

கர்ணனின் மனம் ஏற்க மறுக்கிறது.

தான் ஏன் வர மறுக்கிறேன்என்பதற்கான காரணத்தை

சொல்லுமிடத்தில்தான் கர்ணன் 

இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறான்.



கந்தி தேவியிடம்,

 நான் பாண்டவர்களோடு சேர்ந்து 

ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி, 

கௌரவர்கள் நூறுபேரோடு சேர்ந்து 

போரிட்டாலும் சரி      

இறக்கப்போவது என்னவோ உறுதி 

என்பது எனக்குத் தெரியும்.
     
 ஆறிலும் சாவு ;நூறிலும் சாவு என்பது உறுதி.

சாவு வரப்போகிறது என்று தெரிகிறது.

சாவு வரும்போது  எப்படி செத்தால் என்ன?

 இவ்வளவு நாளும் சோறிட்டுப் வளர்த்தவன்

துரியோதனன்.

 அந்த செஞ்சோற்றுக் கடனுக்காக 

அவன் பக்கம் நின்று போரிடுவது தான்

என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனுக்கு

நான் செய்யும் நன்றிக்கடனாகும்.

அதனால் அவனோடு நின்று போரிட்டு

 உயிர் விடுகிறேன் என்று கர்ணன் பாண்டவரோடு

 வந்து சேர மறுத்து விடுகிறான்.

அதனால்தான் ஆறிலும் சாவு 

நூறிலும்சாவு என்ற பழமொழி வந்ததாம்.

உண்மையாக இருப்பதுபோல் தெரிகிறதா?

 இந்த பழமொழிக்கான 

உண்மையான பொருத்தமான

பொருள் இதுதான்.


       
       

Comments

Popular Posts