நிறைவேறும்அப்போது

          நிறைவேறும் அப்போது

படைத்தவன் நோக்கம் என்ன
            புரியாது இப்போது
      புரிகின்ற நேரம் வரும்போது
             புவியில் ஒன்றும் இருக்காது
     மறைகின்ற நேரம் வந்து
            மதி தன்னை மயக்கும் தப்பாது
      மதி மயங்கிப் போய்விட்டால்
             விதி தன்னை வெல்வது எப்போது?

      விதிதனை வெல்லும் மதி இருந்தால்
              மனம் ஒருபோதும் கலங்காது
       மனதை ஆளும் வலியிருந்தால்
               நதியாக ஓடும் நெறி பிறழாது
       நெறி பிறழாது நீ இருந்தால்
               தடை யாவும் உன்முன் நிற்காது
        தடை யாவும் தாண்டிவிட்டால்
               நேரியது கிடைக்கும் தப்பாது!

       நேரியது தப்பாது என தெரிந்தால்
              கூறியது யாவும் நிற்காது
       கூறியது பிழையாது எனத் தெரிந்தால்
               வாழ்வில் என்றுமே குறையேது
       குறையில்லா நிலை வந்தால்
              நிம்மதி தேடி வரும் விருப்போடு
       இவை யாவும் நடப்பது எப்போது
                படைத்தவன் நோக்கம் நிறைவேறும் அப்போது!
       
       

Comments

Popular Posts