இருபெயரொட்டுப் பண்புத்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பண்புத்தொகை என்பது ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நின்று
பண்பும் பெயரோடு பண்பிப் பெயர் தொடர வருவதாகும்.
பண்பை உடையது எதுவோ
அது பண்பி எனப்படும்
செந்தாமரை
செம்மை+ தாமரை= செந்தாமரை
இதில் ,
செம்மை என்பது பண்புப்பெயர்.
ஆகிய என்பது பண்பு உருபு.
தாமரை என்பது பண்பி.
இதனைப் போன்றே
வட்ட நிலா என்பது வட்டமாகிய நிலா
என்றும்
முத்தமிழ் மூன்றாகிய தமிழ் என்றும்
இன்சொல் என்பது இனிமையான
சொல் எனவும் விரித்துப் பொருள்
கொள்ளப்படும்.
இவற்றில் ஆகிய என்ற பண்பு உருபு
மறைந்து நிற்கிறது.
பண்பும் பெயர் நிறம்,குணம்,வடிவம்
சுவை என்னும் நான்கின்
அடிப்படையில் வரும்.
பண்புத்தொகையில் மற்றொரு வகை
இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
பண்புப்பெயர் இடம்பெறாத பண்புத்தொகை.
எடுத்துக்காட்டு-
மார்கழித் திங்கள்
பொதுப்பெயரோடு சிறப்புப்பெயரோ
சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ
சேர்ந்து ஒரு பொருளை உணர்த்த வரும்
சொல்லை இருபெயரொட்டுப் பண்புத்தொகை
என்கிறோம்.
இரண்டு சொற்களுக்கும் இடையில்
ஆகிய என்னும் உருபு தொக்கி நிற்கும்.
தொக்கி என்றால் மறைந்து என்று பொருள்படும்.
அதாவது மறைந்து காணப்படும்.
பலாமரம் என்ற சொல்லில் பலா என்பது சிறப்புப் பெயர்.
மரம் என்பது பொதுப்பெயர்.
பலாவாகிய மரம் என்று வர வேண்டும்.
இதில் ஆகிய என்ற சொல் மறைந்து வந்துள்ளது.
ஆதலால் பலாமரம் என்பது இருபெயரொட்டுப்
பண்புத்தொகையாகும்.
வெள்ளைத் தாமரை என்ற சொல்லில்
தாமரை என்பது பொதுப்பெயர்.
வெள்ளை என்பது சிறப்புப் பெயர்.
இதில் தாமரையின் நிறப் பண்பு உணர்த்தப்படுகிறது.
வெள்ளையாகிய தாமரை
என்பது வெள்ளைத் தாமரை ஆயிற்று.
ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வந்துள்ளது.
எடுத்துக்காட்டுகள்:
சாரைப்பாம்பு
முத்துப்பல்
தென்னைமரம்
தாமரைப்பூ
மாமரம்
தைத்திங்கள்
வாழைமரம்அ
மார்கழிதிங்கள்
தமிழ்மொழி
மருந்துக்கடை
கன்றுக்குட்டி
மல்லிகைப்பூ
குமரிப்பெண்
கடல்நீர்
தமிழ்ச்சங்கம்
தமிழ்ப்பள்ளி
நெல்லிக்கனி
வாழைக்குலை
வட்டப்பலகை
இவை எல்லாம் இருபெயரொட்டுப்
பண்புத்தொகைக்குச் சான்றுகள் .
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்
வல்லினம் மிகும்.
அதாவது வருமொழி முதலில் க ச த ப
என்ற எழுத்துகளில் ஏதாவது ஒன்று
வந்தால் அது மிகும்.
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
கன்று + குட்டி = கன்றுக்குட்டி
தை + திங்கள் = தைத்திங்கள்
உழவு + தொழில் = உழவுத்தொழில்
தாமரை + பூ = தாமரைப் பூ
வாழை + குலை = வாழைக்குலை
பலா + பழம் = பலாப்பழம்
பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
சில இடங்களில் முதலில் பொதுப்பெயரும்
சிறப்புப் பெயர் இரண்டாவதாகவும்
வருதலும் உண்டு.
எடுத்துக்காட்டாக
மன்னர் செங்குட்டுவன்
புலவர் கம்பர்
ஆசிரியர் மாணிக்கம்
தலைநகர் டெல்லி
மன்னராகிய செங்குட்டுவன்
புலவராகிய கம்பர்
ஆசிரியராகிய மாணிக்கம்
தலைநகராகிய டெல்லி
போன்ற சொற்களில் பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும்
மாறி வந்துள்ளதைக் காணலாம்..
இவையும் இருபெயரொட்டுப்
பண்புத்தொகையே ஆகும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்
வல்லினம் மிகும் என்பதை
"வல்லினம் மிகும் இடங்கள்" என்ற கட்டுரையில் படித்ததை மறுபடியும்
நினைவுபடுத்திக் கொள்க.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
Comments
Post a Comment