கண்ணுள்ளார் காதலவராக.....

கண்ணுள்ளார் காதலவராக......

"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து "

                               குறள்   1127

கண்_ விழி
உள்ளார் _  இருக்கின்றார்
காதலவராக _ காதலராக
கண்ணும் _  கண்ணையும்
எழுதேம் _ எழுத மாட்டோம்
கரப்பாக்கு _  மறைதல்
அறிந்து _ தெரிந்து


எம் காதலர் கண்ணுக்குள்ளேயே இருப்பதால் அவர்
மறைந்துவிடுவார் என்பது அறிந்து எம்
கண்ணுக்கு மையும்  தீட்டமாட்டோம்.

விளக்கம் : 

ஒரு காதலி தன்கண்ணுக்கு மைதீட்டவில்லையாம்.
அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் ?
அவளிடமே கேட்டுவிடுவோமே
என்று அவளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு அவள் கூறிய பதில் என்னவாக
இருக்கும் ? 
கேட்டால் அசந்து போவீர்கள்..
கேளுங்கள்.

"காதலர் எப்போதும் என் கண்ணுக்குள்ளேயே 
இருக்கிறார்.நான் கண்ணுக்கு
மைதீட்டினால் அவர் மறைந்து
போவாரே...
கொஞ்ச நேரம்கூட  என் கண்ணிலிருந்து
அவர் மறைந்து போவதை என்னால்
தாங்க முடியாது.
ஆதலால் நான் கண்ணுக்கு மைதீட்டமாட்டேன்

கண்ணுக்கு மைதீட்டும் நேரம்வரைகூட
என்னால் அவரைப் பிரிந்திருக்க
முடியாது"  என்று தான் கண்ணுக்கு
மை எழுதாமல் இருந்தமைக்கு அழகான
விளக்கம் கொடுத்தாளாம்  காதலி.

அடேங்கப்பா......எவ்வளவு தீவிரமான
காதல் பாருங்கள்.

இமைப்பொழுதும் காதலன் தோற்றம்
கண்ணுக்குள் இருந்து மறையக் கூடாதாம்.

காதலர் எப்போதும் என் கண்ணுக்குள்ளேயே 
இருக்கிறார். ஆதலால் நான் கண்ணுக்கு
மைதீட்டமாட்டேன்.ஏனென்றால் மையெழுதும்
நேரத்தில் அவர் மறைக்கப்படுவார் என்பதால்...
என்பது நல்ல விளக்கம் இல்லையா!

அழகிய காதல் காட்சியைக் கண்டு
 மகிழ வைத்த அருமையான குறள்.
வள்ளுவர் எப்படி எல்லாம் காதல்
இன்பக் கவிதை படைத்திருக்கிறார்
பாருங்கள்.!


English couplet :

"My love doth ever in my eyes reside,I stain them not,
fearing his form to hide "

Explanation :

"As my lover abides in my eyes, I will not even paint them,
for he would then have to conceal himself "

Transliteration :

"Kannullaar kaadha lavaraakak kannum
Ezhudhem karappaakku Arindhu"
















"

Comments

Popular Posts