முறைசெய்து காப்பாற்றும்....
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்...
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் "
குறள் : 388
முறைசெய்து _ நெறி பிறழாது
காப்பாற்றும் _ பாதுகாக்கும்
மன்னவன் _ மன்னன்
மக்கட்கு _ குடிமக்களுக்கு
இறையென்று _ தெய்வம் என்று
வைக்கப்படும் _ போற்றப்படுவார்
நெறி பிறழாது நடுநிலை நின்று
நல்லாட்சி செய்யும் மன்னனைக்
குடிமக்கள் தெய்வமாக
வைத்துப் போற்றுவர்.
விளக்கம் :
பாரபட்சம் பாராது அனைத்து குடிமக்களையும்
சமமாக மதித்து நல்லாட்சி புரிந்து வரும்
மன்னனை மக்கள் தங்களைக்
காத்து வரும் தெய்வமாகவே எண்ணிக்
கொண்டாடுவர்.
இது மக்களுக்கு இயல்பாகவே இருக்கும்
ஒரு குணம்.
உயர்வு தாழ்வு பாராட்டுதல் மன்னனுக்கு
அழகல்ல.
தொழிலால் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடும் கூடாது.
ஒரு மன்னன் தன் குடிமக்கள்
அனைவரையும் பாகுபாடின்றி
சமமாகப் பார்க்கும் பண்பு கொண்டவனாக
இருக்க வேண்டும்.
ஒருவருக்கு நீதி செய்கிறேன் என்று
மற்றொருவருக்கு அநீதி இழைத்துவிடக்
கூடாது.
முறையாக நீதி வழங்க வேண்டும்.
அப்படிப்பட்ட மன்னன் வாய்க்கப் பெற்றால்
மக்கள் அவனைத் தெய்வத்திற்கு இணையாக
வைத்து தொழவும் அஞ்சமாட்டார்கள்.
மன்னன் என்பது ஆட்சியாளர்களைக்
குறிக்கும்.
ஆதலால் ஆட்சியாளர்கள் நடுநிலை
தவறாதவர்களாக
இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
இறை என்ற சொல்லை வள்ளுவர்
மன்னனைக் குறிப்பிடுவதற்காக
பயன்படுத்தியதற்குக் காரணம் என்ன ?
மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் என்று
புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
மன்னன் மக்களுக்கு உயிர் போன்றவன்.
அதனால்தான் வள்ளுவரும் மன்னனை
இறை என்று குறிப்பிட்டுள்ளார்.
English couplet. :
"Who guards the realm and justice strict maintains
That king as God o'er subject people reigns"
Explanation :
That king , will be esteemed a God among men,
Who performs his own duties and protect his subjects.
Transliteration :
"Muraiseythu kaappaatrum mannavan makkatku
Iraivendru vaikkap padum"
Comments
Post a Comment