கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்...

       கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்.....


"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் "

                                               குறள்.  : 643
கேட்டார் _சொல்லக்கேட்டவர்
பிணிக்கும் _ ஈர்க்கும்
தகையவாய்_ இயல்பினை உடையனவாய்
கேளாரும் _சொல்லைக் கேட்காத பிறரும்
வேட்ப_  விரும்பும் வண்ணம்
மொழிவதாம்_ சொல்லப்படுவதாம்
சொல் _   சொல்வன்மை

கேட்பவர்களை ஆட்கொள்ளும் தகைமையதாகவும்
கேட்காதவரும் கேட்க விரும்புவதாக அமைவதே
சொல்வன்மையாகும்.


விளக்கம் :

கேட்பவர் உள்ளத்தைத் தன்வசப்படுத்தி,
கேட்காதவரும் தாம் கேட்காமல் போய்விட்டோமே என
எண்ணும் அளவுக்கு ஒருவருடைய பேச்சு
இருக்க வேண்டும்.
தன் சொல்வன்மையால் தன் பேச்சைக்
கேட்போரைக் கட்டிப்போடும் திறம் இருப்பதுதான்
நல்லப் பேச்சுக்கு அழகு.
பேசப்பேச இன்னும் பேச மாட்டாரா என்ற ஈர்ப்போடு
அமர்ந்திருக்க வைப்பதாக ஒரு பேச்சு
இருக்க வேண்டும்.
நல்லப் பேச்சாளர் பேச்சில் அப்படியே
கட்டுண்டு கிடப்போம்.
அந்தப் பேச்சைப் பற்றி யாராவது 
சொல்லும்போது ஐயையோ...நான்
கேட்காமல் போய்விட்டேனே என்று
ஒரு ஏக்கம் ஏற்படும் .
நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று
எண்ணத் தோன்றும்.
பேச்சு நயம்படப் பேச இருந்தால்
கேளாதோரையும் கேட்கத் தூண்டும்.
பேச்சாளருக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே
பேசும்போது இந்தப் இப்பண்பு வேண்டும்.
குறிப்பாக உயர் பதவியில் இருப்போர்
பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில்
இருத்தல் வேண்டும்.
அப்போதுதான் ஒரு கட்டுக்கோப்போடு
நிர்வாகத்தைக் கொண்டு செல்ல முடியும்.

கேட்டவர்களைத் தன்வசப்படுத்தும் இயல்பினதாய்க்
கேளாதவரையும் கேட்க வேண்டும் என்று
 தூண்டும்படி  அமைவதே சொல் ஆற்றலாகும்
 என்கிறார் வள்ளுவர்.

English couplet : 

'Tis speech that spell_bound holds the listening ear,
While those who have not heard desire to hear.

Explanation : 

The speech is that which seeks to elements as bind
His friends to himself and is so delivered as to make
even his enemies desire( his friendship)


Transliteration :

"Keettaarp pinikkum thkaiyavaaik kelaarum
Vetpa Mozhivadhaam sol "

Comments

Popular Posts