வழுத்தினாள் தும்மினேன் ஆக....

   வழுத்தினாள் தும்மினேன் னாக....

"வழுத்தினாள் தும்மினேன் னாக அழித்தழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று"

                           குறள்  1317

வழுத்தினாள் _ வாழ்த்தினாள்
தும்மினேன்னாக _ தும்மியதற்காக
அழித்தழுதாள் _மாற்றி அழுதாள்
யார் _ யாரை
உள்ளி  _  நினைத்து
தும்மினீர் _ தும்மல் கொண்டீர்
என்று _ என்றாள்


நான் தும்மியதற்காக என்னை வாழ்த்தியவள்
உடனே அதனை மாற்றிவிட்டு யாரை நினைத்துத்
தும்மினீர் என்று கூறி அழுதாள்.

விளக்கம் :
தும்மலின்போது உயிர் ஒரு வினாடி போய்விட்டு
வரும் என்பது பழைய நம்பிக்கை.அதனால்
 உடன் இருப்பவர் நீடூழி வாழ்க
என்று வாழ்த்துவார்.

இது காலங்காலமாக இருந்துவரும்
ஒரு மரபு.
மிகவும் நேசிக்கிற ஒருவர் நினைக்கும்போதுதான்
தும்மல் வருமாம்.
தலைவனைத் தலைவி உயிருக்கு மேலாக
நேசிக்கிறாள்.
தன்னைவிட வேறு எந்தப் பெண்ணையும்
தலைவன் ஏறெடுத்துக் கூட
பார்க்கக் கூடாது என்று நினைக்கிறாள்.
அப்போது தற்செயலாக தலைவனுக்குத்
தும்மல் வந்துவிடுகிறது.
தும்மிவிடுகிறான்.
உடனே நீடூழி வாழ்க என்று வாழ்த்தி
விடுகிறாள்.
வாழ்த்தியதும்தான் நினைவு வருகிறது.
மிகவும் நேசிப்பவர்கள் நினைத்தால்தானே
தும்மல் வரும் .
அவரை மிகவும் நேசிக்கிற நான் அருகில்
இருக்கிறேன்.
அப்படியானால்....
அப்படியானால்...
அவரை நினைக்கின்ற இன்னொருத்தி
இருக்கின்றாளா ? 
யாரவள்?
நினைத்த மாத்திரத்தில் அப்படியே 
அழுகை பொங்கி வருகிறது.
தன்னைவிட தன் தலைவனுக்கு 
வேறு எந்தப் பெண்ணுடனோ 
நெருக்கம் இருக்கிறது.
அதனால்தான் தும்முகிறான்
என்ற ஐயம் ஏற்படுகிறது.

இது பெண்களுக்கு இயல்பாக இருக்கக்கூடிய
குணம்தானே....
இதைத்தான் வள்ளுவர் இந்தக்
குறளில் அழகாகக் கூறியுள்ளார்.
அட போங்க இதற்கெல்லாமா சந்தேகப்
படுவாங்க?
ஒரு சிறிய நிகழ்வு.
அதனை வள்ளுவர் எவ்வளவு அருமையாக
காட்சிப்படுத்தியுள்ளார் பாருங்கள்.


English couplet :

"She hailed me when I sneezed one day, but straight 
with anger, seized, she cried, who was the woman
,pray, thinking of whom you sneezed "

Explanation : 

"When I sneezed she blessed me, but at once changed
Her mind and wept, asking ,"At the thought of whom
did you sneeze?"

Transliteration : 

"Vazhuthinaal thumminen Aaka Azhiththazhudhaal
Yaarullith thummineer endru"

Comments

Popular Posts