கருமம் செயஒருவன் கைத்தூவேன்....
கருமம் செயஒருவன் கைதூவேன்....
"கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல் "
குறள் : 1021
கருமம் _ கடமை, செயல்
செய _ செய்வதற்கு
ஒருவன் _ ஒரு மனிதன்
கைதூவேன் _ சோர்வடைய மாட்டேன்
என்னும் _ என்று சொல்லுதல் போன்ற
பெருமையின் _ பெருமைப் படத்தக்க
பீடுடையது _ பெருஞ்செயல்
இல் _ வேறு இல்லை
தன் குடிக்குச் செய்யும் கடமையில்
சோர்வடையாமல் விடாமல் முயற்சி
செய்து அந்தக் கடமையை நிறைவேற்றுவது்
போல் பெருமை தரும் செயல்
வேறு எதுவும் இல்லை.
விளக்கம் :
ஒருவன் தான் பிறந்த குடிக்கு ஆற்ற வேண்டிய
கடமைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குதல்
கூடாது.
தன் மக்களுக்கு ,தன் உடன் பிறப்புகளுக்கு,
தன் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைளைக்
கட்டாயம் செய்து முடிக்க வேண்டும்.
என்னால் முடியாது என்றுகடமையிலிருந்து
நழுவிவிட முடியாது.
அப்படி தன் கடமையை ஆற்றாது விலகி
ஓடுதல் தான் பிறந்த குடிக்குப் பெருமை
சேர்ப்பதாக இருக்காது.
எனக்கென்று சில கடமைகள் உண்டு அவற்றைத் திறம்பட
செய்து முடிப்பதிலிருந்து நான் ஒருபோதும்
விலகி ஓடமாட்டேன். என்ன பாடுபட்டாவது
நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வேன்
என்று அதனைச் செய்து முடிப்பதுதான்
ஒருவருக்குப் பெருமை தரும்.
இதைவிடப் பெருமைதரு செயல் வேறு
எதுவும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர்.
English couplet :
Who says I'll do my work, nor slack my hand
His greatness , clothed with dignity supreme,
shall stand.
Explanation :
There is no higher greatness than that of one saying
I will not cease in my effort to rise my family.
Transliteration :
"Karumam seyaoruvan kaidhooveen ennum
Perumaiyin periyaitadhu ll "
நன்று
ReplyDelete