வில்லேருழவர் பகை கொளினும்....

 வில்லேருழவர் பகைகொளினும்.....



வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை "

                குறள்   :   812

வில் _வில்
ஏர் _கலப்பை
உழவர் _ உழுபவர்
பகை _  பகைமை
கொளினும் _ கொண்டாலும்
கொள்ளற்க _ கொள்ளாதொழிக
சொல்லேர்  உழவர் _  பேச்சுக்கலையில் வல்லவர்
 பகை _  பகை

வில் தொழில் செய்து போரிடும் பகைவரோடு
பகைகொள்ளினும் கொள்ளலாம் ஆனால்
சொல்வன்மை மிக்க அறிஞரோடு
ஒருபோதும்  பகை கொள்ளக் கூடாது.

விளக்கம் : 

வில்லுடைய பகைவரைப் பகைத்துக் கொண்டாலும்
சொல்வல்லவரோடு பகை
கொள்ளக் கூடாது.
வீரர்களோடு பகை கொள்ளலாம்.
விவேகம் உள்ளவரோடு பகை
கொள்ளக் கூடாது.
வலிமையால் வரும் கேடு
பெருமளவில் இருக்காது. ஆனால்
அறிஞர்கள், சொல்லாட்சித் திறமிக்க
புலவர்களைப் பகைத்துக் கொண்டால்
அரசன் நல்லாட்சி நடத்திட முடியாது.

அரசனுக்கு நல் ஆலோசனை சொல்லும்
திறன்மிக்க அமைச்சர்களையும் மன்னன்
ஒருபோதும் பகைத்திடக் கூடாது.
அரசனுக்கு மட்டுமல்ல. நமக்கும் 
ஏற்ற குறள்.

அறிவுள்ளவர் கூடவே இருக்கும்போதுதான்
நல்வழிகளைக் கேட்டறிந்திட முடியும்.

அது மட்டுமல்ல வாய்ச் சொல்வன்மை
இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால்
அச்சொல்லாலேயே நம்மை மடக்கிவிடுவர்.
ஆதலால் பேச்சுத் திறன் மிக்கவர்களோடு
 பேசும்போது எப்போதும் கவனம் வேண்டும்.
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்
என்பார்கள்.

வெல்லும் சொல்லும் அறிந்து பேசத் தெரிந்த புலவர்
பெருமக்கள் பேச்சாளர்கள் ஆகியோரிடம் அதிக
கவனமாகப் பேச வேண்டும்.

அவர்களைப் பகைத்துக் கொள்ளவும்
கூடாது.

 சொல் வன்மை உடையவரோடு ஒருபோதும்
 பகை கொள்ளாதீர் என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"Although you hate incur of those whose ploughs
are bows , Make not the men whose ploughs
are words your foes!"

Explanation :

Though you may incur the hatred of warriors whose
ploughs are bows, incur not that of ministers ploughs
are words .

Transliteration :

"Viller Uzhavar pakaikolinim kollaarka
Soller Uzhavar pakai "







Comments

Popular Posts