வெறுங்கை என்பது மூடத்தனம்
வெறுங்கை என்பது மூடத்தனம்
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்"
என்றார் வள்ளுவர்.இறைவன் யாரையும்
யாசித்து உயிர் வாழ வேண்டும்
என்று படைக்கவில்லை.அப்படியே
படைத்திருந்தால் கடவுளே பிச்சை எடுத்து
அல்லல் பட்டு கெட்டுப் போகட்டும்
என்கிறது திருக்குறள்.
கை இருப்பவன் யாசிப்பதை வழமையாக்கி
கையேந்தி இருக்கிறான்.கைகள் இல்லா
உழைப்பாளியிடம் யாசகம் கேட்கிறான்.
கையில்லாதவனிடம் கைகளை நீட்டி
பிச்சை கேட்கிறான்.
இல்லாதவனிடம் இருப்பவன் இரந்து நிற்கிறான்.
இது அன்றாடம் பொது இடங்களில்
காணும் காட்சி.
என்ன ஒரு வேடிக்கை!
" மாற்றுத்திறனாளிகள் நாங்கள்; மாற்றம்
காணும் திறனாளிகள் நாங்கள்" என்பதை
மெய்ப்பிக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை பேர்!
கூன் ,குருடு,
செவிடு இல்லா அரிதான மானிடப்பிறவியைப்
பெற்றும் மனதில் ஊனம் இருந்தால்
வறுமைதான் மிஞ்சும் "என்பதை
உணர்த்த அன்றாடம் பிறரிடம்
கையேந்தி வாழ்பவர்கள் எத்தனை பேர்!
வலி தந்த வலிமை வாழ்க்கைப் பயணத்தின்
புதிய அத்தியாயத்தை
எழுத வைக்கும். முன்னேறுபவர்கள்
முடங்கிக் கிடப்பதில்லை.
முடங்கிக் கிடப்பவர்கள் முன்னேறுவதில்லை.
"யாசகம் கேட்டு மானத்தை இழப்பதைவிட
உழைத்து வாழ்வது மேல்." என்கிறது இசுலாம்.
"ஏற்பது இகழ்ச்சி " என்கிறார் ஔவை.
ஏற்பது என்பது பிச்சை என்பது மட்டுமல்ல.
எதற்காகவும் யாரிடமும் போய்
நிற்றல் கூடாது. அதுவும்கூட யாசிப்பதற்குச்
சமமாகவே கருதப்படும்.
நம்பிக்கை உள்ளவனுக்கு கை ஒரு பொருட்டல்ல .
பெறுகிற நிலையில் இருப்பவன்
கொடுக்கிற நிலையிலும்
கொடுக்கிற நிலையில் இருப்பவன்
பெறுகிற நிலையிலுமாய்
இடமாறிப் போயினர்.
" வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்" என்பர்.
"விரலே வேண்டாம் ;
ஊக்கம் மட்டும் போதும் "என்கிறான் சுமை தூக்கிவரும்
மனிதன்.
"உழைக்கத் துணிந்தவன் வாசலை
வறுமை தீண்டாது.
உழைக்க மறுப்பவனிடம் வறுமை
குடியேற அஞ்சாது."
என்னிடம் என்ன இருக்கிறது... பணம்
இருக்கிறதா...பதவி இருக்கிறதா...படிப்பு இருக்கிறதா
ஒன்றுமே இல்லையே என்று புலம்புகிறீர்களா...
ஏன் உங்களிடம் கைகள் இல்லை...
உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.
அது இருக்கிறதல்லவா!
அது போதுமே நீங்கள் அடுத்தவர்களிடம்
கை ஏந்தாமல் தன்மானத்தோடு வாழ்வதற்கு.
உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ!
பயன்படுத்தப்படாமல் வைக்கப்டிருக்கும்
எந்தப் பொருளும் துருப்பிடித்துவிடும்.
அல்லது தூசியடைந்து பயன்படுத்த
லாயக்கற்றுப் போய்விடும்.
அது போன்றதுதான் உடல் உறுப்புகளும்.
பயன்படுத்தப்படாமல் இருந்தால்
மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும்.
கைகால்களை முடக்கியே வைத்திருந்தால்
செயலிழக்கும்.
எப்போதும் புதுவெள்ளம் பாய்ச்சப்பட்ட
தடாகமாக இருந்தால் தான் மதிப்பும்
மரியாதையும் உண்டு.
இதுதான் இந்தப் படம் நமக்குச்
சொல்லித்தரும் பாடம்.
Comments
Post a Comment