வெண்பா வகைகள்
வெண்பா வகைகள்
செய்யுள்கள் அல்லது பாக்கள்
அவற்றின் சீர்களுக்கு இடையே
உள்ள தளைகளின் தன்மையின்
அடிப்படையில் வெவ்வேறுவிதமான
ஓசைகளை உடையனவாக
இருக்கின்றன.ஓசை
வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள்
ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன.
பா வகைகள்:
பாவகைகள் ஐவகைப்படும். அவை :
செப்பலோசையை உடைய வெண்பா
அகவலோசையை உடைய ஆசிரியப்பா
துள்ளலோசையை உடைய கலிப்பா
தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா
என்பனவாம்.
வெண்பா :
வெண்பாவிற்கான ஓசை செப்பலோசையாகும்.
செப்பல் என்றால் செப்புதல், உரைத்தல் ,
விடை கூறுதல் எனப்படும்.
வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற
ஓசை இருப்பதால் செப்பலோசை எனப்படுகிறது.
ஏனைய பாக்களைவிட மிகவும் இலக்கணக்
கட்டுக் கோப்புடையது வெண்பா.
சீர் :
வெண்பாவில் வெண்பாவுரிச் சீர்
அதாவது காய்ச்சீரும்
ஈரசைச் சீரான இயற்சீரும் வரும்.
ஈற்றுச் சீராக மட்டும் அசைச் சீரான
ஓரசைச்சீர் வரலாம்.
இவை தவிர வேறு எந்தச் சீரும்
வெண்பாவில் வராது.
தளை:
இயற்சீர் வெண்டளையும்
வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும்.
மா முன் நிரையும் விளம் முன் நேரசையும்
வருவது இயற்சீர் வெண்டளையாகும்.
நேரசையை இறுதில் கொண்ட
மூவசைச்சீர் வெண்சீர் வெண்டளை
எனப்படும்.
அடி:
வெண்பா அளவடிகளால் அமையும்.
அதாவது நான்கு சீர்கள் இருக்கும்.
ஈற்றடி மட்டும் சிந்தடியாய் வரும்.
மூன்று சீர்கள் மட்டுமே கடைசி அடியில் வரும்.
வெண்பா குறைந்தது இரண்டடியும்
அதிகப்படியாக பாடுவோன் விருப்பத்திற்கு
ஏற்ப இருக்கும்.
தொடை :
அடிகள்தோறும் ஒரு குறிப்பிட்ட
வகையிலான ஓசை இயைபு
அமைகிறது. ஓசை ஒழுங்கோடு
தொடுக்கப்படுவதால் தொடை
எனப்படுகிறது.
இரு சீர்களில் இரண்டாம் எழுத்து
ஒன்று போல் இருந்தால் அதனை
எதுகை என்போம்.
வெண்பா பல எதுகை அமைப்புகள் கொண்ட
பல விகற்பமாகவோ
எல்லா அடிகளிலும் எதுகை அமைப்பு
ஒன்றாக இருக்கும் ஒரு விகற்பமாகவோ
இருக்கும்.
எத்தனை அடிகள் இருந்தாலும்
முதற்சீரில் கண்டு மண்டு பண்டு தொண்டு
என்பன போல எதுகை ஒத்து அமைந்தால்
அது ஒரு விகற்பம் எனப்படும்.
அது இல்லாமல் முதல் இரண்டு அடிகளிலும்
கண்டு, வண்டு என்று வந்துவிட்டு
அடுத்த இரண்டு
அடிகளில் வென்று , கொன்று
என்று வந்தால் அது இரு விகற்பம்.
அவ்வாறு இல்லாது கண்டு, வண்டு என்று
முதல் அடியிலும்
கொன்று, வென்று என்று
இரண்டாவது அடியிலும்
பட்டு, தட்டு என்று மூன்றாவது அடியிலும்
என்று இப்படியாக மாறி மாறி
எதுகை வருவது
பல விகற்பமாகும்.
ஈற்றுச்சீர் :
வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள் ,மலர்
எனும் வாய்பாடுகளுடைய ஓரசைச்
சீராகவோ காசு, பிறப்பு என்னும்
வாய்பாடுகளுடைய குற்றியலுகரத்தில் முடியும்
நேரீற்று இயற்சீராகவோ வரும்.
முற்றியலுகரத்தில் முடியும் நேறீற்றியற் சீரும்
வரலாம்.
வேறு எவ்வகைச் சீரும் வெண்பா ஈற்றில்
வருவதில்லை.
வெண்பாவின் வகைகள் ,:
குறள் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சிந்தியல் வெண்பா
என்பனவாம்.
குறள் வெண்பா :
வெண்பாவின் இலக்கணங்களைப் பெற்று
இரண்டடியால் வருவது குறள் வெண்பா.
நேரிசை வெண்பா :
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
நான்கடியாய் இரண்டாம் அடியின் இறுதிச்சீர்
தனிச்சீராக வருவது நேரிசை வெண்பா.
இன்னிசை வெண்பா:
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி
வருவது இன்னிசை வெண்பா.
இது ஒரு விகற்பத்தாலும் வரும்.
பல விகற்பத்தாலும் வரும்.
பஃறொடை வெண்பா :
வெண்பாவின் இலக்கணங்களைப் பெற்று
நான்கடிக்கும் அதிகமான அடிகளைப்
பெற்று வருவது பஃறொடை வெண்பா.
சிந்தியல் வெண்பா :
வெண்பா இலக்கணங்களைப் பெற்று
மூன்றடியால் வருவது சிந்தியல் வெண்பா.
வெண்பாவின் பொது இலக்கணம்
நினைவில் கொள்க.
சீர் :
இயற்சீர்
வெண்சீர்
தளை :
இயற்சீர் வெண்டளை
மா முன் நிரை
விள முன் நிரை
வெண்சீர் வெண்டளை
(காய் முன் நேர் )
அடி :
அளவடி.( நான்கு சீர் இருப்பது )
ஈற்றடி சிந்தடியாக வரும்.( மூன்று சீர் )
தொடை :
ஒரு விகற்பத்தாலும் வரும்.
பல விகற்பத்தாலும் வரும்.
ஈறு :
நாள் (நேரசை)
மலர் ( நிரையசை)
காசு (நேர் நேர் )கடைசி எழுத்து குற்றியலுகரம்.
பிறப்பு (நிரை நேர் )
போன்ற வாய்பாடுகள் கொண்டு முடியும்.
ஓசை:
செப்பலோசை
சிறப்பான் விளக்கம் நன்றி
ReplyDelete