முற்றியலுகரம்
முற்றியலுகரம் என்றால் என்ன?
உயிர்க்குறில் எழுத்துகளான அ, இ, ,உ,
எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் ஒரு மாத்திரை
அளவு ஒலிப்பன.
இந்த உகரம் தனக்குரிய ஒரு மாத்திரை
அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதைக்
குற்றியலுகரம் என்கிறோம்.
வல்லின மெய்யோடு சேர்ந்து வரும்
கு, சு ,டு , து, பு , று என்ற எழுத்துகள்
மட்டுமே குற்றியலுகர எழுத்தாக வரும்.
கு , சு , டு , து , பு , று என்னும்
எழுத்துகள் தனிக்குறிலை அடுத்து வருமானால்
அதன் ஓசை அளவு குறைவதில்லை.
அவ்வாறு தன் ஓசை அளவு குறையாது
வரும் எழுத்துகள் முற்றியலுகரம்
எனப்படும்.
நகு
பசு
தடு
எது
மறு
இதில் வரும் உகர எழுத்துகள் தனிக்குறிலை
அடுத்து வருவதால் இது
தன் மாத்திரை அளவில் குறைந்து
வரவில்லை.
மெல்லின இடையின எழுத்துகளோடு சேர்ந்த
உகரம் சொல்லுக்கு இறுதியில் வரும்போது
மாத்திரை குறைந்து ஒலிப்பதில்லை.
ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம்
குறைந்து ஒலிக்காமல் தனக்குரிய
மாத்திரை அளவான ஒரு மாத்திரை
அளவில் ஒலிக்குமானால் அது முற்றியலுகரம்
எனப்படும்.
அணு
தும்மு
ஓய்வு
பிறழ்வு
நிகழ்வு
எழு
உழு
வலு
துள்ளு
எரு
இரவு
நிறைவு
உறவு
விரிவு
ஏவு
இவை போன்ற இன்னும் பல சொற்களைத்
தேடி எழுதி வையுங்கள்.
முற்றியலுகரம் பற்றிய தெளிவான
அறிவு கிடைக்கும்.
குற்றியலுகர எழுத்தையும் முற்றியலுகர
எழுத்தையும் மாறி மாறி
உச்சரித்துப் பாருங்கள்.
எளிதில் வேறுபாட்டினை
அறிந்து கொள்ளலாம்.
அதனை ஒரு பயிற்சியாகவே
எடுத்து உடன் பயிலும்
மாணவர்களோடு சொல்லிப் பழகலாம்.
தனிக்குறிலை அடுத்து தன் ஓசையில்
குறையாமல் வரும் உகரம்
முற்றியலுகரம்.
Comments
Post a Comment