தொடர்புக்கு அப்பால்
தொடர்புக்கு அப்பால்
கைபேசி கடிதமானது
காதோடு கவிதை பேசுது
உரக்கப் பேச மறுக்குது
உள்ளுக்குள்ளே சிரித்து மகிழுது
கேலிக்கு மயங்குது
கேளிக்கை விரும்புது
நாழியாயினும் பேசுது
நாட்கணக்காய் வீணடிக்குது
கேள்விக்குத் தடை விதிக்குது
கேட்பவரைத் துறக்க நினைக்குது
வீணில் காலம் கடத்துது
வீதியில் பேசி சிரிக்குது
தன்னிலை மறந்து திரியுது
தன்மானம் இழந்து தவிக்குது
பெற்றோரை வெறுத்து ஒதுக்குது
பேர்தெரியா தொடர்பில் இருக்குது
கதைகதையாய்ப் பேசுது
கனவுக்குள் மிதக்குது
கற்பனையில் வீடு கட்டுது
கனவுக்குள் குடித்தனம் நடத்துது
வீட்டில் பேச தடை விதிக்குது
வீணில் பேசி அலையுது
தொடர்புக்கு அப்பால் நிற்குது
தொடரும் வலையில் வீழ்ந்துக் கிடக்குது
மதியீனம் இதைப் புரிந்துவிடு
மயங்கி நில்லாதே விலகிவிடு!
Comments
Post a Comment