குன்றேறி யானைப்போர் கண்டற்றால்....


  குன்றேறி யானைப்போர்.....
"   குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
   உண்டாகச் செய்வான் வினை "

                           குறள்.       :       758

குன்று _  மலை 
ஏறி  _    ஏறி நின்று 
யானை    _  வேழம் 
போர்    _  சண்டை
கண்டு  _  பார்த்தல்
அற்றால்  _ அத்தகையது
தன்கைத்தொன்று உண்டாக _ தன் கையில் செல்வம்
இருக்கும்போது
செய்வான்  _  செய்பவனது
வினை  _  செயல்


தன் கையில் இருக்கும் செல்வத்தை வைத்துக்கொண்டு
ஒரு செயல் செய்வது என்பது மலையின்மேல்
ஏறி யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பாகும்.

விளக்கம் : 

 செய்க பொருளை என்று சொல்லி பொருள்
 தேடுவது மிக முக்கியமான ஒன்று என்று
 வலியுறுத்தியவர் வள்ளுவர்.
 இந்தக் குறளிலும் பொருள் கையில் இருப்பது
 எவ்வளவு பாதுகாப்பானது என்பதை
 வலியுறுத்துவதற்கு யானைப் போரைப் பார்ப்பதை
 எடுத்துக்கூறி புரிய வைக்கிறார்.
 யானைப் போரை நிலத்தில் இருந்து பார்த்தல்
 ஆபத்தாக முடியும்.
 ஆனால் பாதுகாப்பாக ஒரு மலையின்மீது
 ஏறி நின்றுகொண்டு பார்த்தால் முழு போரையும்
 கண்டு களிக்கலாம். நமக்கு எந்த வித இடையூறும்
 ஏற்படாது.
 ஒருவன் தன் கையில் பணம் வைத்துக்கொண்டு
 தொழிலில் இறங்க வேண்டும்.
 அதுதான் அவனுக்குப் பாதுகாப்பானதாக
 இருக்கும்.
 எந்தவித இடையூறும் இல்லாமல் தொழில்
 செய்யமுடியும்.
 பொருள் கையகத்திருக்க செய்யும் செயல்
எந்தவித இடையூறுமின்றி நல்லபடியாக
முடியும்.
வெறுங் கையால் முழம்போட முடியாது.
தன் கையில் பொருள் வைத்துக் கொண்டு
ஒரு தொழிலைச் செய்வது என்பது 
பாதுகாப்பாக ஒரு மலையின் மீது ஏறி நின்றுகொண்டு
யானைப்போரைப் பார்த்து மகிழ்வதற்கு
ஒப்பாகும்.

English couplet: 

 As one to view the strike of elephants 
 who takes his stand , on hill he's climbed,
 is he who works with money in his hand.

Explanation : 

An undertaking of one who has wealth
in one's hands is like viewing  in an
elephant fight from a hill top.

Transliteration :. 

"Kunderei  yaanai porkantatraal thankaiththondru
Untaakach cheyvaan vinai"
Comments

Popular Posts