ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் வாழ்த்து
கன்மலை பிளந்திட
கல்லறை திறந்திட
கண்டவர் சாட்சி பகர்ந்திட
கல்வாரி வாக்கு மெய்ப்பட
சாவினை வென்றார்
சரித்திரம் படைத்தார்
உயிர்த்தார் ...உயிர்த்தார்
உலகினை ஜெயித்தார்!
எனக்காய் உனக்காய்
யாவர்க்குமாய்
உயிர்விட்ட மீட்பர்
உயிரோடு எழுந்தார்
தோமாவுக்கு விலா
எலும்பு சொல்லியது சாட்சி
மன்னனுக்கு வெண்முட்டை
செம்முட்டையாகியது சாட்சி
மகிபன் ஏசு உயிர்த்தெழுந்தார்
மகதலேனா முதற்சாட்சி
மக்களுக்கு மனமே சாட்சி
உயிர்த்த ஏசுவால் உலகிற்கு மீட்சி
அனைவருக்கும் ஈஸ்டர் நாளின் நல்வாழ்த்துகள்!
Comments
Post a Comment