உள்ளது ஒழிய ஒருவர்க்கு....
உள்ளது ஒழிய ஒருவர்க்கு....
நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும்.
காற்றை அள்ளி கைப்பைக்குள் வைக்க
முடியுமா?
அது அது போக்கில் போய்விடும்.
உனக்கு என்று விதிக்கப்பட்டது எதுவோ
அதுதான் நம்மோடு தங்கும்.
உலகமெல்லாம் போய் ஓடி ஓடி உழைத்தாலும் என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும்.
நாம் எதை அனுபவிக்க வேண்டும் என்று விதித்திருக்கிறதோ அதைத்தான் அனுபவிக்க முடியும். அதைத்தவிர ஒரு கையளவு கூட அதிகமாக நுகர முடியாது.
அதனால் அவனுக்கு அது கிடைத்திருக்கிறதே எனக்குக் கிடைக்கவில்லையே. நானும் அவரைப்போல ஆகிவிட வேண்டும் என்ற
ஆசையை விட்டுவிட்டு
இருப்பதில் திருப்தி கொள்ளுங்கள்
என்கிறார் ஔவை.
அவையின் நல்வழி பாடல் இதோ உங்களுக்காக....
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு
பாடல்: 6
கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாமல்
நிம்மதியாக இருங்கள்.எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பதால்
என்ன லாபம்? என்பது பாடலின் பொருள்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும். அதற்குக் காரணம்
இறைவன் கணக்கில் அந்தப் பொருளோ அல்லது உணவோ நமக்கானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்குக் கிடைக்க வேண்டும் என்று இருப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருக்க வேண்டும் என்று இருந்தால் அது கிடைக்கவே கிடைக்காது
இதுதான் ஔவையின் கருத்து.
Comments
Post a Comment