கண்டதும் கொண்டதும்

 🌹கண்டதும் கொண்டதும்🌹


       👌 விருது வழங்கும் விழா👍


மும்பை மாநகராட்சித்

தமிழாசிரியர் குழுமம்

மும்பை.


ஓய்வும் பணியும் 

ஓரிடத்தில் கைகோத்த விழா

இளமையும் முதுமையும்

இணைந்ததோர்ப் பெருவிழா

உள்ளங்களை இணைக்கும்

உறவுத் திருவிழா

உள்ளுந்தோறும் நெஞ்சை

அள்ளும் கவியாடுவிழா

முத்தமிழும் சத்தமில்லாமல்

முத்தமிட்டு விளையாடிய விழா

கலையாடு கவியோடு

கற்றவர் திரண்ட கலைவிழா 

அறிமுகச் சொற்கள்

பேரதிர்வாய்ச் 

செவிமடலைத் திருப்ப

இன்னிசைக் கீதம் ஒன்று

இதமாய் நெஞ்சை வருட

அடுக்குத் தொடரை அள்ளி வீசி

ஆசிரியர் ஜெரோம்

அனைவரையும் வரவேற்க

தொடங்கியதிந்த விருது விழா

பிடறி சிலிர்க்க

அரங்கம் அதிர

சிங்கம் ஸ்டீபன் சார்

எழும்பி வந்து

சிந்தனையைச் சிதற விட

இடைச் செறுகலாய்

உடல் நலம் பேணலுக்கும்

உரையொன்று உண்டென்று

செய்முறை  நடனம் ஆடி

சிலிர்க்க வைக்க

மேகலா வர்ணன் ஆசிரியரும்

அருமையாய்க் கை கோர்க்க

மேடை கலை மேடையாகி

ஓடை இது தமிழோடையென 

உவந்த வேளையில்

Alive வாக இருக்க அலைகவெனச்

சிலேடைகளை அள்ளி வீசி

விழாவை live  ஆக்கி 

காண்போரைத் தன் வயப்படுத்திய

வர்ணன் ஆசிரியர்

பேச்சாளுமை கண்டு

பேசா நிலைக்குச் சென்ற வேளையில்

வில்லியம் சார் காட்சியில் வர

அரும்மருத்துவர் இவரன்றோவென

நற்சான்றிதழ் எழுதி 

கைகளில் தந்திட நினைக்கையில்

திரை விலகி 


தலைவர் ஸ்ரீனிவாசன் சார்

சிறப்புரையாற்றியபோது

தான் யார் என்பதை  அறிய வைத்து

தலைமகனை உருவாக்கும் 

அரியப்பணி ஆசிரியப்பணி என்று

ஆசிரியருக்குப் பாராட்டுப்பத்திரம்

வாசித்தது தலைவருரைக்கோர் 

மணிமகுடம் என்று

உவந்து நின்ற நிலையில் 


குழுமத் தலைவி அனிதா

ஆசிரியை அசத்தலான 

சொல்லாடலோடு 

அருந்தமிழ்ச் சொல்லெடுத்து

விருது பெறுவோரை

அறிமுகம் செய்த பாங்கு

அனைவரையும் வியக்க  வைக்க

அண்ணாந்து பார்த்தால்

ஸ்ரீனிவாசன் ஐயா கையிலிருந்து

 விருதினைப் பெற

 தேவதைகளென ஆசிரியைகளோடு ஆசிரியரும் அணிவகுத்து

கம்பீரமாய் நடந்துவந்த 

கண்கொள்ளாக் காட்சி

கண்களை விட்டு 

அகல மறுக்க


காட்சியில்  பொருளாளர்

 பாலன் வந்து

நிதி மேலாண்மைக்கு

யானுண்டு என 

வெள்ளை அறிக்கை வெளியிட 

கண்முன்னே தலைமை ஆசிரியை

ஞானம்  அவர்கள் வந்து

தமிழ் பள்ளிக்குத் தான்

ஆற்றிய அரும்பணிகளைச் சொல்ல

இவரன்றோ நல்லாசிரியை என்று

நெஞ்சம் நெகிழ

அணியம்செய் விருது கொடுத்து 

மகிழ்ந்து நின்ற வேளையில்

இது மட்டும் போதாது

இன்னும் கொஞ்சம் வேண்டும் 

வேண்டுமென நெஞ்சம் கெஞ்ச


கடத்தல் விளையாட்டொன்று

கலகலப்பாக்கிட

மாநிலங்களைப் பிரித்தாளுமை

செய்து மற்றுமொரு விளையாட்டுக் 

காட்டிய நிகழ்ச்சித் தொகுப்பாளரொடு இணைந்தத் தலைமை

கண்ணுக்கு விருந்தளிப்பது மட்டும் 

எம் பண்பாடன்று

"செவிக்குணவில்லாதபோழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப்படும் "என்பதுதானே நம்

தமிழர் பண்பாடு என்றபடி

 உணவுண்ண வேண்டிக் கொள்ள

வயிறார உணவுண்டு

வாயார வாழ்த்தி

மறுபடி மற்றுமொரு விழாவுக்கு 

வாய்தா வாங்கி 

கண்ட காட்சிகளை

நெஞ்சில் கொண்டாடியபடி

மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்!


விழா அமைப்பாளர்களுக்கு

நன்றியும் வணக்கமும்

🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏







Comments