தமிழுக்காக தலை கொடுத்த குமணன்
தமிழுக்காக தலை கொடுத்த குமணன்
குமணன் மன்னன் தன்னிடம்
பொருள் வேண்டி வருபவர்களுக்கு
இல்லை என்று சொல்லாத நல்லுள்ளம் படைத்தவன்.
அவனுக்கும் அவன் தம்பி இளங்குமணனுக்கும் நெடுநாள் பகை இருந்துவந்தது.
பகை போரில் முடிய குமணன் தோல்வியடைந்து நாட்டைவிட்டு வெளியேறி காட்டில் மறைந்து வாழும் சூழல் ஏற்பட்டது.
அண்ணன் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் அண்ணன் மீது இருந்த பகை மட்டும் இளங்குமணனுக்குக் குறையவில்லை.
அண்ணனை உயிரோடு விட்டு வைத்தால் என்றாவது ஒருநாள் தன் அரியணை பறிபோகலாம் என்ற அச்சம்
அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அதனால் அண்ணனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான்.
எப்படிக் கொல்வது?
அண்ணன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லையே!
ஒற்றர்களை அனுப்பி தேடிப்பார்த்தான்.
எந்தச் சாதகமான செய்தியும் கிடைக்கவில்லை.
அதனால். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்தான்
இளங்குமணன்.
இந்தச் சூழலில் குமணனைக் காட்டில் சந்திக்கிறார் ஒரு புலவர். தன் வறுமையைச் சொல்கிறார்.
ஆனால் புலவருக்குக் கொடுப்பதற்கு குமணனிடம் எதுவுமில்லை.
என்ன செய்வது?
இதுநாள் வரை என்னை நாடி வந்த எந்தப் புலவரும் வெறுங்கையோடு சென்றதில்லை.
வறுமை என்று வந்தவரை எப்படி வெறும் கையோடு அனுப்புவது என்று அவன் மனம் வருந்துகிறது.
"புலவரே, என் தம்பி என் தலைக்கு விலை வைத்து இருக்கிறான். என் தலையை வெட்டி கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். என் தலையை எடுத்துக் கொள்ளுங்கள்."என்று தன் தலையைத் தந்தான் குமணன்.
பாடல்
"அந்த நாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்த நாள் வந்து நீ நொந்து எனை அடைந்தாய்
தலைதனைக் கொடு போய்த் தம்பி கைக் கொடுத்து அதன்
விலைதனைப் பெற்று உன் வெறுமை நோய் களையே"
அருமையான தமிழ்ப் புலவரே!நான் அரசனாக இருந்த அந்த காலத்தில் நீர் வரவில்லை .
இந்த நாள் வந்து
நீர் கஷ்டப் பட்டு
என்னை வந்து அடைந்து இருக்கிறீர்.
உமக்கு கொடுப்பதற்கு என் தலையயை தவிர தற்போது வேறு
ஒன்றும் என்னிடம் இல்லை. என் தலையயை கொண்டு போய்
என் தம்பியின் கையில் கொடுத்து
அதற்கு அவன் கொடுக்கும் பரிசைப் பெற்று
உமது வறுமை நோயை நீக்கிக் கொள்வீராக
என்கிறான்.
அதனை அடுத்து குமணன் பேசியவை
கண்கலங்க வைக்கின்றன.
வாளால் நெஞ்சை இரண்டாக கூரிட்டது
போன்ற வலியைக் தந்து நிற்கிறது.
தமிழுக்காக நான் எதையும் செய்யத் துணிந்தவன் என்பது அனைவர்க்கும் தெரியும்.
என்னிடம் உமக்குக் தருவதற்கு
இப்போது ஒன்றுமில்லை என்றாலும்
என் தம்பி விரும்பும் ஒரு பொருள் என்னிடம் இருக்கிறது.
அதனைப் பெற்றுக்கொண்டு என் தம்பியிடம் கொடுத்து அதற்கு ஈடாக அவன் தரும்
பொருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்
என்கிறான் குமணன்.
தமிழுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
எவாவளவு பொருளும் கொடுப்பார்கள்.
ஆனால் தமிழ் பாடும் புலவர்கள் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காக
தன் தலையையும் கொடுக்கத் துணிந்த குமண மன்னனின் செயல் கண்கலங்க
வைக்கிறது .
"தலைதனைக் கொடு போய்த் தம்பி கைக் கொடுத்து அதன்
விலைதனைப் பெற்று உன் வெறுமை நோய் களையே"
நெஞ்சைக் கலங்க வைக்கும் வரிகள்
இல்லையா?
Comments
Post a Comment