மனிதம் மாண்டதோ
மனிதம் மாண்டதோ
மனிதம் மாண்டதோ
மதமேறிப் போனதால்
மானிடம் தடம்
மாறிப் போனதோ
மாமலை உருகி
மானிட குருதிக் குளியல் நடத்தி
மருளும் காட்சி அரங்கேற்றி
மரணபீதி கொடுத்தவர் எவரோ?
மண்டு கவின் காட்சி
கண்டு மகிழ வந்தவரை
உண்டு உயிர் கொண்டு
வண்டு உடலாட
பெண்டு எழில் வாட
செண்டு நிலை மாற
கொடும்பாதகனாய் வந்து
களியாட்டம் நடத்தியவர் எவரோ?
ஏனிந்த கொலைவெறி
யாரைப் பழி தீர்க்க
சமரசம் எடுத்தீர்
சமரசமில்லா இழிப்பிறவி
சமூகம் செய்த குற்றம் யாதோ
சமநிலை தவற வைத்ததெதுவோ
சகமனிதனை சடுதியில்
சவக்குழிக்குள் தள்ளி
சங்கீதம் பாட வைத்தவர் எவரோ?
கறை படிந்ததோ
காஷ்மீர மலைகள்
கவினிழந்ததோ
கண்கள் பொலிவிழந்தோ
கன்னி மனம் நைந்ததால்
கன்னலிழந்து எம்மை
கையறுநிலை பாட வைத்து
களையிழக்க வைத்தவர் எவரோ?
மனிதம் மரித்ததோ
மானுடம் மடிந்ததால்
மகிழ்ச்சிதான் தொலைந்ததோ
கொண்டாட வந்தவரை
திண்டாட வைத்து
சண்டாளன் என்ற பெயர்
பெண்டோடு பெற்று
உண்டாடி மகிழ்ந்தவர் எவரோ?
கனவு தேச பிதாமகன்
கண்களை மூடியதால்
காட்சிகள் போர்க்களம் ஆனதுவோ
கலையா எழிலைக்
கலைய வைத்ததெவர் தவறோ
கண்ணீரால் அஞ்சலி எழுதும்
கடைசிவுரை இதுவாகட்டுமென
கடவுள் நினையாதிருப்பாரோ?
அழகான காஷ்மீரில் மக்களுக்கு இப்படியொரு அவலநிலையா என்று தோன்றுகிறது.மனிதம் தான் மாண்டுவிட்டது.மிக அருமையான பதிவு.
ReplyDelete