மேகம்

                  மேகம்

திட்டுத் திட்டாய் வானத்தில்
பட்டுப் பட்டு மேகங்கள்
சொட்டுச் சொட்டாய் நீரை எடுத்துக்
 கட்டுக் கட்டாய் சேர்த்தது!

மடியில் கனம் மிகுந்தது
சடுதியில் சோர்வு கொண்டது
உடலும் கறுத்துப் போனது
ஒப்பாரி வைக்கத் துணிந்தது !


தரதரவென மடியைக் கிழித்து
 சடசடவென நீரைக் கொட்டி
 விடுவிடுவென நடந்தது
 படபடப்பு அடங்கிப் போனது!


  பஞ்சும் கொஞ்சம் விளையாடிட
  மஞ்சாய் மாறி மலைமுகட்டைத் தொட்டது
  விஞ்சும் மகிழ்வு தந்தது
  வீழ்ந்து தரையைத் தொட்டது !
  

Comments

Popular Posts