தூங்குக தூங்கிச் செயற்பால....
தூங்குக தூங்கிச் செயற்பால…
" தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை "
காலம் தாழ்த்தி செய்யத் தக்க செயல்களை காலம் தாழ்த்தி செய்யலாம். உடனடியாக செய்யபட வேண்டிய செயல்களைக்
காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்ய வேண்டும்.
தூங்குக _ தாமதமாக, மந்தமாக
தூங்கிச் செயற்பால _ தாமதமாக செய்யக்கூடிய செயல்களை
தூங்கற்க _ தாமதமாக செய்யாதே
தூங்காது _ உடனடியாக,விரைவாக
செய்யும் வினை _செய்யத்தக்க செயல்கள்
Translation :
" Slumber when sleepy works in hand beware
Thou slumber not when action calls for sleepless care"
Explanation:
Delay does not matter on acts that have to proceed cautiously. Hurry up tasks that demand quick action.
Transliteration :
"Thoongum Thoongich cheyarpaala Thoongarka
Thoongaadhu Seyyum Vinai "
இது என்ன தூங்கிச் செய்வது...
தூங்காமல் செய்வது….
வேடிக்கையாக இருக்கிறதா!
இது வேறு ஒன்றும் இல்லங்க…
நாளை மற்றநாள் செய்து கொள்ளலாம்.இன்றே ஆத்திர அவசரமாக செய்ய வேண்டாம்.மெதுவாக செய்ய வேண்டியவற்றை மெதுவாக செய்யுங்கள்.
இன்று செய்யப்பட வேண்டிய வேலைகளை நாளை என்று தள்ளிப் போடாதீர்கள். உடனடியாக செய்து முடித்துவிடுங்கள் என்கிறார் திருவள்ளுவர்.
நிதானமாக செய்ய வேண்டிய வேலைகளை ஆத்திரமாக செய்து ஏதாவது ஏடாகூடா ஆகிவிடக்கூடாது.
உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளை நாளை செய்யலாம் என்று தள்ளிப்போட்டு அதனால் நட்டம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது.
என்பதை விளக்குவதற்காகதான் வள்ளுவர் தூக்கத்தைக் கையிலெடுத்து தூங்கி செய்க….தூங்காமல் செய்க என்று
நயம்பட கூறுகிறார்.
Comments
Post a Comment