துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...

         துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்....

மழை இல்லை என்றால் புல்லும் முளைக்காது.
உயிர்களின் தாகமும் தணியாது.
உயிர்களின் பசியையும் நீர்வேட்கையையும் தணிக்கும் சக்தி மழைக்கு மட்டுமே உண்டு.
 இதைத்தான் வள்ளுவர்,

        "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
        துப்பாய தூஉம் மழை "   ( குறள்: 12)

விளக்கம் :

அதாவது உண்பவர்களுக்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக
இருப்பது மழையாகும் என்பதுதான் இந்த குறளின் பொருள்.

         துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி _ உண்பார்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி
         துப்பார்க்கு _ அவற்றை உண்பவர்க்கு
         துப்பு _ உணவு 
         ஆயதூம் _ஆவதும்
         மழை _வான் மழையே ஆகும்.

English couplet  :12

     The rain makes pleasant eaters rise ;As  food for itself thirst
     quenching draught supplies.

Explanation :

      Rain produces good food and is itself food.

Transliteration :

Thupparkkuth  Thuppaaya  Thuppaakkith  Thuppaarkkuth
  Thuppaakki Thooum Mazhai "
  
      ஒரு பொருள் நமக்கு வேண்டாம் என்றால் வேண்டாம்...வேண்டாம்...வேண்டாம்...என்று மூன்றுமுறை வரை ஓங்கி கூறுவோம்.
      ஒரு செயலை செய்யமாட்டேன் என்றால்...
       நான் மாட்டேன்....நான் மாட்டேன் ...நான் மாட்டேன் என்றால் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்போம்.
      இந்த திருக்குறளில் வள்ளுவர் ஐந்துமுறை துப்பு என்ற  அடிப்படைச் சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தியுள்ளார்.
      இதன்மூலம் திருவள்ளுவர் தான் சொல்லவந்த கருத்தை நச்சென்றுப் பதிய வைக்க விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
      அதாவது மழை இல்லை என்றால்... உணவுமில்லை....உயிருமில்லை என்று துப்பாக்கியால் ஓங்கி உச்சந் தலையில் அடிப்பதுபோல் சொல்லி இருக்கிறார்.
      இப்போது தெரிகிறதா வள்ளுவர் ஏன் இத்தனைமுறை இந்த ...துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
              துப்பாய -      என  துப்பாக்கியோடு மழைக்குப் பாதுகாப்புக்கு வந்திருக்கிறார் என்பதை!  
              மழை இன்னும் பெய்யுமில்ல...
               
  
         
         
         

Comments

  1. வாழ்க.வளர்க.நிலைத்து நீடித்து நிற்க.

    ReplyDelete

Post a Comment

Popular Posts