தள்ளா விளையுளும் தக்காரும்....

         தள்ளா விளையுளும் தக்காரும்....

    "தள்ளா விளையுளும்  தக்காரும் தாழ்விலாச்
      செல்வரும் சேர்வது நாடு "
                                                         குறள் : 731
     குறையாத உற்பத்தியைத்தரும் உழைப்பாள பெருமக்களும் தக்க அறிவுடைய சான்றோரும் குறைவில்லா செல்வத்தைப் பெற்ற செல்வந்தரும் சேர்ந்து வாழ்தலே நாடு எனப்படும்.

தள்ளா _ தளரச்சியற்ற, குறைவற்ற
விளையுள் _ விளைச்சல் ,முதிர்கை,வயல்
தக்காரும் _ சிறந்தோர், மேன்மக்கள் ,சான்றோர்
தாழ்விலாச் _ குற்றமில்லாத, குறைவில்லாத ,துன்பம் தராத , சாய்வில்லாத
செல்வரும் _ செல்வம் மிக்கவரும்
சேர்வது _ சேர்ந்து வாழ்வது
நாடு _ நாடு எனப்படும் 




   English couplet


      "  Where spreads fertility unfailing where resides a band
        Of virtuous men and those of ample wealth call that a land."

Explanation 

      A kingdom is that in which those who carry on a complete cultivation virtuous persons and merchants with inexhaustible wealth
      dwell together.

Transliteration : 

      " thaLLa viLaiyuLum thakka arun thaazhvilaach 
        chelvan saervadhu naadu "
      

நாடு என்றால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும்.
கல்வி அறிவு பெற்ற தகுதி பெற்ற சான்றோர் நாட்டை வழிநடத்த  
இருத்தல் வேண்டும்.
நல்லவழியில் ஈட்டப்பட்ட செல்வம் மிகுதியாக 
இருக்க வேண்டும்.
 மொத்தத்தில் விளைச்சல் மிகுந்திருக்கவேண்டும்.
 சான்றாண்மை மிக்க மக்கள் வாழ வேண்டும்.
 அறவழியில் வந்த குறைவில்லா செல்வம் நிறைந்திருக்க வேண்டும்.
 இந்த மூன்றும் சேர்ந்திருப்பதே ஒரு நல்ல நாடாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.

Comments

Popular Posts