கற்றிலன் ஆயினும் கேட்க...

              கற்றிலன் ஆயினும் கேட்க....

      கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
        ஒற்கத்தின் ஊற்றாம் துணை "
                                                    குறள் : 414 


      நூல்களைக் கற்கவில்லை என்றாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
      அந்த கேள்வி அறிவானது ஒருவருக்கு வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படும்போது ஊன்றுகோல் போல் நின்று துணையாக உதவும்.

   கற்றிலன் _ நூல்களை படிக்கவில்லை
   ஆயினும் _ என்றாலும் 
   ஒருவற்கு _ ஒருவருக்கு 
   அஃது _ அந்த கேள்வி அறிவானது 
   ஒற்கத்தின் _ தளர்ச்சி, வறுமை ,குறைவு 
   ஊற்று _நிலத்தடி நீர் ஊற்று
   ஆம் _ போன்று 
   துணை _ துணையாக நிற்கும்


 English couplet :
  " Though learning none hath he , yet let him hear away ;
   In wealth prove a staff and stay "
Explanation 

      A man who he be without learning , let him listen .
      That will be to him a staff in adversity .


   Transliteration : 

      " Katrina Naayinung Ketka Aqdhoruvarku
       Orkaththin Oortraan Thunai "


 "  கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து் ஒழுகின்
   நல்லறிவு நாளும் தலைப்படும் "=என்கிறது நாலடியார்.
   ஒருவர் தான் கற்கவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம்.
   கற்றாரோடு இணங்கி இருந்து அவர் வாய்மொழி கேட்டு வந்தாலே போதும். 
   கல்லாதவரும் கற்றவருக்கு இணையான கேள்வி ஞானத்தைப் பெற்றுவிடலாம். 
   அவ்வாறு பெற்ற அறிவு மனம் தளர்ச்சியுற்ற காலத்தில் உற்ற துணையாக நின்று தாங்கிக் கொள்ள உதவும்.
   இளமை முதுமை இரண்டிற்குமே உற்ற துணையாக நின்று இனிமை சேர்ப்பது அறிவு ஒன்றேயாகும்.
   அந்த அறிவை கற்றுதான் பெறவேண்டும் என்பதல்ல.
   கேட்டறிதல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
   காதால் கேட்பது மனதில் ஆழப்பதிந்துவிடுமாம்.
   தேல் கார்னகி என்ற அறிஞர் "எந்தச் செய்தியையும் மூன்றுமுறை காதால் கேட்டால் ஆழப் பதிந்துவிடும்" என்கிறார்.
    உடம் தளர்ச்சி ஏற்பட்டவனுக்கு ஊன்றுகோல் எவ்வாறு உதவியாய் இருக்குமோ அதுபோன்று மனச்சோர்வு ஏற்படும்போது கேள்வியறிவு தாங்க வல்லதொரு துணையாக நின்று உதவும்.
    ஆதலால் கற்க போதுமான வாய்ப்பு வசதிகள் கிடைக்காவிட்டாலும் கேட்டு அறிக என்பது வள்ளுவர் வாக்கு.
    "கேள்வி முயல்  "என்ற ஆத்திசூடி வரியையும் நினைவில் கொள்க .
   

Comments

Popular Posts