மகன் தந்தைக்கு ஆற்றும்...
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி...
" மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் "
மகன் தந்தைக்கு செய்யும் உதவி யாதெனில் இவனுடைய பெற்றோர்
இப்படிப்பட்ட மகனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தனரோ என
பெருமைப்படும் விதமாக இருத்தல் வேண்டும்.
Translation :
" The duty of a son to his father is to make others to wonder
What penance the father had done to beget him "
Explanation :
The duty of the children is to make other people to explain what
prayers the parents had done to give birth to these valuable
children.
மொத்தத்தில் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பிள்ளைகள் இருத்தல் வேண்டும்.
இப்படி ஒரு பிள்ளை பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் உலகம் மெச்சவேண்டும்.
என்ன புண்ணியம் பண்ணினனோ நீ வந்து பிறந்திருக்கிறாய் என்று பெற்றோர் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும்.
இதைத்தான் நாலுபேர் மத்தியில் என்னை தலை நிமிர்ந்து நடக்க வைத்துள்ளாய் என்று பெற்றோர் பெருமையுடன் கூறுவதாக இருக்குமோ !
Comments
Post a Comment