இன எழுத்துகள்

     
                       இன எழுத்துகள்


     இன எழுத்துகள் என்றால் என்ன?
           எதன் அடிப்படையில்  இன எழுத்துகளாக வகைப் படுத்தப்படுகின்றன?
        இன எழுத்துகளை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்?என்று பல்வேறு கேள்விகள் நம் மனதில் வந்து போகலாம்.

          முதலாவது இன எழுத்துகள் என்றால் என்ன?என்பதைப் பார்ப்போம்.
          எழுத்துகள் தாம் பிறக்கும் இடம்,அவற்றை ஒலிப்பதற்கான
          
           முயற்சி , ஒலிப்பதற்கு எடு்த்துக்கொள்ளும் கால அளவு, 
           
            வடிவம் , பொருள் இவை ஏதேனும் ஒருவகையில் ஒத்துப்
            
             போகும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர்.       

"தானம் முயற்சி அளவு  பொருள் வடிவு ஆன

ஒன்று ஆதி ஓர்புடை ஒப்பு இனமே"



உயிர்எழுத்துகளில் குறில் எழுத்துகள் நீண்டு ஒலித்தே நெடில்

 எழுத்துகளாக மாறுகின்றன.
 
       எனவே ஒவ்வொரு குறில் எழுத்திற்கும் அதற்குரிய நெட்டெழுத்து
       
        அதாவது நெடில் எழுத்து இன எழுத்தாகக் கருதப்படுகிறது.

          அ       -     ஆ 

          இ       -      ஈ

          உ         -     ஊ

          எ         -      ஏ

           ஒ         -      ஓ 

இன எழுதாக வரும்.

ஐ  மற்றும் ஔ ஆகிய இரண்டு எழுத்துகளுக்கும் குறில் எழுத்து 

இல்லாததால் ஐகாரத்திற்கு இகரமும்,     ஔகாரத்திற்கு உகரமும் 

இன எழுத்தாக கொள்ளப்படும்.

          ஐ     -     இ

            ஔ     -  உ

       
வல்லின எழுத்துகள் ஆறுக்கும் மெல்லின எழுத்துகள் ஆறும் 

இன எழுத்துகளாக  அமையும்.


                      க்  -       ங்       -        பங்கம்,  மாங்கல்யம்

                       ச்     -     ஞ்         -      மஞ்சள்,    வஞ்சி

                        ட்       -    ண்       -     வண்டு  , கொண்டாடு

                        த்       -    ந்          -      நந்தவனம், பந்தி

                         ப்      -      ம்        -     பம்பரம்,  தாம்பூலம்

                        ற்         -    ன்       -    நன்றி , அன்றில், 

ய ர ல வ ழ ள  ஆகிய ஆறு இடையின  எழுத்துகளும் தனி

 எழுத்துகளாகும்.
         
      இன எழுத்துகளை அறிந்து கொள்வதால் மட்டுமே எழுத்துகளை
      
       தவறில்லாமல் எழுத முடியும்.

         கவிதை எழுதும்போது நல்ல ஒலிநயம் கொண்டு கவிதை
         
          எழுதுவதற்கு கண்டிப்பாக இன எழுத்துகளைப் பற்றி தெளிவாக
          
           தெரிந்து வைத்து கொள்வது அவசியமாகும்.
          
         





    

Comments

Popular Posts