அன்பும் அறனும் உடைத்தாயின்....
அன்பும் அறனும் உடைத்தாயின்.....
" அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது " ( குறள் : 45 )
மனைவி பிள்ளைகள் மீது அன்பும் அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்ற பண்பும் இருந்தால் இல்வாழ்க்கை பயன் தருவதாக அமையும்.
English couplet : 45
" If love and virtue in the household reign
This is of life the perfect grace and gain "
Explanation :
If the married life possess love and virtue, these will be both
its duty and reward.
Transliteration :
" anpum aRanum udaiththaayin ilvaazhkkai
paNpum payanum adhu "
இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவனுக்கு மனைவி மக்கள்மீது அன்பு இருத்தல் வேண்டும்.அதுமட்டும் அல்லாது தான் தேடிய பொருளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற பண்பும் கூடவே இருந்தாக வேண்டும்.
அப்போதுதான் அது பலருக்கும் பயன் தரும் ஒரு வாழ்வாக அமையும்.
இத்தகைய நற்குணங்களைப் பெறாதார் இல்வாழ்க்கை நடத்துவதால் எந்த பயனுமில்லை என்பது திருவள்ளுவர் கருத்து.
அன்புதானுங்க வாழ்க்கை.
அதுவும் பண்போடு கூடி இருந்தால்...
நிறைவான வாழ்வாக இருக்குமில்ல...
கேட்பதற்கே நன்றாக இருக்குதுல்ல..
வாழ்ந்துதான் பார்ப்போமே!
Comments
Post a Comment