தீயினாற் சுட்டபுண்....

        தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்….


"  தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

  நாவினால் சுட்ட வடு "


தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறிவிடும். வெளியில் தழும்பை தந்துவிடும்.அதேபோன்றுதான் ஒருவர் நெஞ்சைக் காயப்படுத்தும் சுடு சொற்களும் என்றுமே ஆறவே ஆறாது 

நிரந்தர வடுவாகிப் போகும்.


English couplet :

" In flesh by fire inflamed nature may thoroughly heal the sore;

In soul by tongue inflamed the ulcer healeth never heal "


Explanation: 


      The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.


Transliteration:

       

Theriyaathu Suttapun Ullaarum Aaraadhu

  Naavinaar Sutta Varu "


தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். ஆனால் அது ஏற்பட்ட இடத்தில் ஒரு நிரந்தர தழும்பைத் தந்துவிடும்.

ஒருவரை அவமானப்படுத்த வேண்டும்  என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்ட தீய சொல்லானது காலத்தால் ஆறிவிட்டது போல் தோன்றும்.

ஆனால் நினைக்கும்தோறும் உள்ளத்தில் வேதனையைத்தரும். சொல்லப்பட்ட வார்த்தைகளால் பட்ட அவமானங்கள் வடுவாகிப்போய் மனத்தில் நிரந்தரமாக ஒரு துன்பத்தைத் தந்து கொண்டிருக்கும்.

 அதனால்தான் தீயினும் கொடிது தீய சொற்கள் என்பார்கள்.

தீயினால் சுட்டது புண்.

வார்த்தையினால் சுட்டால் அது வடு.

எவ்வளவு அருமையாக வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார் வள்ளுவர்!

 







Comments

Popular Posts