பழமொழியும் புதுமொழியும்

             பழமொழியும் புதுமொழியும்

1 .    உருளுகிற கல்லில் பாசி பிடிக்காது
       உழைக்கிறவன் வீட்டில் வறுமை இருக்காது !

2.     நிறைமதி காணா வானுமில்லை
        நிம்மதி விரும்பா மனிதருமில்லை!


3.      இன்பத்தில் இணையும் உறவு
         துன்பத்தில் துணை நிற்கும் நட்பு!

4.       சட்டிப்பானை இல்லா வீடும் இல்லை
          வட்டியும் முதலும் வாங்கா வார்த்தையுமில்லை!

5.        பள்ளத்தில் வீடு கட்டாதே
           கள்ளரோடு உறவு வைக்காதே!

6.       பருவம் பார்க்காது விதைக்காதே
          பக்குவம் இல்லாரோடு பழகாதே!

7.       அலை இல்லா கடலும் இல்லை
           கவலை இல்லா மனிதனும் இல்லை!

 8.      விடியாத இரவும் இல்லை
          முடியாத துன்பமும் இல்லை!

9.       தாகத்திற்கு தெரியாது தண்ணீரின் தரம்
          மேகத்திற்கு தெரியாது தராதரம்!


10.      பற்றிய கொடிதான் படரும்
           குற்றிய நெல்தான் சோறாகும்!

11.       அன்பில்லாமல் வளர்ந்த பிள்ளையுமில்லை
            அனுபவத்திற்கு ஈடான ஆசானுமில்லை!

12.      விதைகள் தூங்குவதில்லை
           விதைத்தவனுக்கு தூக்கம் வருவதே இல்லை!

13.      பழக பழக பாலும் புளிக்கும்
           நெருங்க நெருங்க நட்பும் கசக்கும்!

14.      ஆற்றிலும் சேற்றிலும் கால் வேக்காதே
           ஆற அமர யோசியாமல் எதிலும் இறங்காதே!

15.       கரையை அடையும் முன்னே துடுப்பை எறியாதே
             கற்றுத் தெரியும் முன்னே காரியத்தில் இறங்காதே!

16.       முடியாது என்று ஒன்றும் இல்லை
            முடியும் என்பதே நம்பிக்கையின் எல்லை!

17.       காற்றுக்குத் தெரியாது கிழக்கும் மேற்கும்
            மாசுக்குத் தெரியாது கூடமும் மாடமும்!
             

18.       உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு
             மண்டும் கவலை மன்னனுக்கும் உண்டு!

19.       தனிமரம் தோப்பாகாது
            தனித்து நின்று ஜெயிக்க முடியாது!

20.       அறிந்து கொள்ள ஆர்வம் வேண்டும்
            தெரிந்து கொள்ள துணிவு வேண்டும்!

21.       வாய்ப்புகள் காத்திருப்பதில்லை
             வரப்புகள் வயல்களாவதில்லை!

22.       அன்பு ஆயிரங்களைக் கொண்டு வரும்
            அறிவு ஆண்டாண்டாய்க் கூட வரும் !
             

 23.     அன்பு ஆயிரங்களைக் கொண்டு வரும்
           அறிவு ஆண்டாண்டாய்க் கூட வரும்!

      
24.      வென்றவனை கொண்டாடும் உறவு
            வீழ்ந்தவனைத் தூக்கிவிடும் நட்பு!
            

25.        வெறுங்கையால் முழம் போட முடியாது
               பருக்கை இல்லாமல் பசி ஆறமுடியாது.!


26.     பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்
             பேசிய வார்த்தை உனக்கு எஜமான்!

  27.       நடப்பதற்கு  வேண்டும் கால்கள்
              உழைப்பதற்கு  வேண்டும்  விரல்கள்!

28.       பாலுக்காக அழுமாம் இளமை
             கூழுக்காக அழுமாம் ஏழ்மை!

29.         ஏட்டுப் படிப்பு கறிக்கு உதவாது
               வீட்டுப் பெருமை நாட்டிற்கு உதவாது!

30.         காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
              காசுள்ளபோதே சேர்த்துக்கொள்.!

31.       எளியவன் சொல் அம்பலம் ஏறாது
            பெரியவன் செய்த தப்பு பேசப்படாது !


32.      காண்பவை யாவும் காட்சியும் அல்ல
           கேட்டவை யாவும்  சாட்சியும் அல்ல.!
         
33.     புத்தகத்தோடு கொள்க நட்பு
          முதியவர்களோடு செய்க அன்பு!

34.    அரும்பு இல்லா மலருமில்லை
         குறும்பு செய்யா பிள்ளையுமில்லை!

35.   இருக்கும்வரைதான் மதிப்பு
        கொடுக்கும்வரைதான் உறவு!
        

36.    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
         எலி இளைத்தாலும் இரும்பைக் கடிக்காது!

  37.  கடந்து போன வெள்ளம் மடை திரும்பாது
          கடந்துபோன காலம்  காட்சிக்கு வராது!

38.    காதுகள் கேட்பதற்கு திறந்தே இருக்கட்டும்
          உதடுகள்  உண்மைக்கு மட்டும் திறக்கட்டும்.!

 39.   புயல் வந்தபின் அமைதி உண்டு
         துன்பம் வந்தபின் இன்பம் உண்டு.!

40.   முதலடி எடுத்து வைக்காமல்
         முற்றத்தில் கூட நடக்க முடியாது!

41.   விதிபடி நடக்கும் என்பவன் சோம்பேறி
         மதிபடி நடப்பவன் அறிவாளி!

 42  .  ஆசைக்காக  வாங்குவது ஆடம்பரம்
          தேவைக்காக  வாங்குவது சிக்கனம்!

43.        மன்னிப்பவன் மனிதன்
             மன்னிப்பு கேட்பவன் மாமனிதன்.!

44.       காண்பவை யாவும் உனக்குச் சொந்தமல்ல
            காணாதவை எவருக்குமே சொந்தமல்ல!

 45      .குட்ட வரும்போது குனியாதே
             எட்ட சென்ற பின்னர் திமிராதே!
             
46      குப்பை இல்லா தெருவுமில்லை
           குட்பை சொல்லா உறவுமில்லை.!

47.       தாகத்தற்குத் தெரியாது தண்ணீரின் தரம்
            மேகத்திற்குத் தெரியாது தராதரம்!

48.       அணைக்காமல் வளர்ந்த பிள்ளையுமில்லை
             அனுபவத்திற்கு ஈடான ஆசானுமில்லை.!

49.      துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
             அள்ளுகிற கை சும்மா இருக்காது!
             
50.       வெற்றென எதையும் தூக்கி வீசாதே               
              சிற்றெறும்பும்  தக்க நேரத்தில் உதவும் மறவாதே!

51.      உன் கையை மட்டுமே நம்பு
           உழைப்புக்கு அது தரும் தெம்பு!
     
            

  52      பொறுமை இழந்து ஓடினால்
            வெறுமையாய்த் திரும்புவது நிச்சயம்!

53.       வெற்றி மமதையில் வீழ்ந்து விடாதே
            தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே!
            

54.    நம்பிக்கையில் காரியத்தில் இறங்கு
          நன்மையில் முடியும் என்பதை  நம்பு !
 
55.   அழையாமல் அடுத்தவன் வீட்டிற்குள் நுழையாதே
         உழைக்காமல் உன் வீட்டில் இருக்காதே!       

56.     வண்ணமில்லா  சித்திரம் அழகு பெறாது
          எண்ணமில்லா எழுத்து பொலிவு பெறாது!

57      இலக்கு  இல்லா பயணம்
            விளக்கு இல்லா கலங்கரை விளக்கு!

58       முயற்சியும் பயிற்சியும் இருந்தால்
            உயர்ச்சி உந்திப் பிடிப்பது உறுதி!

59.        பாதை சரியாக இருந்தால்
              இலக்கு எட்டிப் பிடிக்கும் தூரம்தான்.!

60.         பலரிடம் யோசனை கேட்காதே
              மனதிடம் யோசனை கேட்க தயங்காத

Comments

Post a Comment

Popular Posts