கற்க கசடறக் கற்பவை...

      கற்க கசடறக் கற்பவை....


     "கற்க கசடறக் கற்பவை கற்றபின்
       நிற்க அதற்குத் தக "
                                                குறள் : 391

   ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களை பிழையற நன்கு கற்க வேண்டும்.அவ்வாறு கற்ற பின்னர்  கற்றவற்றிற்கு ஏற்ப  அவற்றை
   நடைமுறைப்படுத்தி ஒழுகுதலை கடைபிடிக்க வேண்டும்.

Translation :

     "So learn that you may full and faultless learning  gain
       Then in obedience meet to lessons learnt remain "

Explanation :

         Let aman learn thoroughly whatever he may learn and
         let his conduct be worthy of his learning.

Transliteration :

        " KaRka kasadaRak kaRpavai katRapin
         niRka adhaRkuth  thaka "

கற்றல் என்பது எந்தவித குறைபாட்டுடனோ தெளிவில்லாத நிலையில் அறைகுறையாகவோ இருத்தல் கூடாது. ஐயம் திரிபற கற்றல் வேண்டும்.
      அப்படி கற்றுவிட்டால் மட்டும் போதுமா....
      கற்ற கல்வியை நடைமுறைப் படுத்திப் பார்க்க வேண்டாமா  ?
      பெற்ற கல்வியின்படி ஒழுகுதல்தானே அறிவுடைமை.
      கற்றல் மட்டும் அறிவு அல்ல.
      அதன்படி ஒழுகுதல் அறிவுடைமை.
      தெளிவாக   கற்போம்.
      கற்றவற்றின்படி நடப்போம்.
       

Comments

Popular Posts