நெருநல் உளனொருவன் இன்றில்லை.....

           நெருநல் உளனொருவன் இன்றில்லை.....


    " நெருநல் உளனொருவன்  இ்ன்றில்லை என்னும்
       பெருமை உடைத்து இவ் வுலகு"

    நேற்று இருந்தவர் இன்று இல்லை என்று சொல்லும்படியான நிலையாமையாகிய பெருமை உடையது இவ்வுலகு.


       நெருநல் _  நேற்று
       உளன் ஒருவன் _ வாழ்ந்தவன் ஒருவன்
       இன்றில்லை _ இன்று உயிரோடு இல்லை
       பெருமை உடைத்து_ நிலையாமையாகிய பெருமையைக் கொண்டது
       
English couplet:

      " Existing yesterday today to nothing hurled.
       Such greatness owns this transitory world "

Explanation :

     This world possesses the greatness that one who yesterday was is not today.


  Transliteration:

         "  Nerunal uIlan oruvan Intillai Ennum
           Perumai Utaiththuiv Ullaku "
        
    நேற்று நான் அங்கே பார்த்தேன் .....இன்று இங்கே பார்த்தேன் அதற்குள் இப்படியா!
    வாயைப் பிளந்து அதிர்ச்சியோடு நிற்கும் அளவுக்கு நிகழ்வுகள் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன.
    இப்படி இறப்பு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
    அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறுவதுகூட   இப்புவிக்குப் பெருமை  என்கிறார் திருவள்ளுவர்.
    திருவள்ளுவர் இறப்பைப்பற்றி மட்டும்தான் இப்படி் கூறி இருப்பாரா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன்.
    எப்படி பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் வருகிறதோ அதுபோன்றதுதான் வாழ்க்கையும்.
    மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
    எல்லோர் வாழ்க்கையிலும் அந்த மாற்றங்கள் நிகழும்.
    ஒரு பொருள் காணாமல் போய்விட்டால் திரும்ப வரலாம்.
    ஆனால் இறப்பு என்பது காணாமல் போவது அல்ல. நிரந்தரமாக நம்மைவிட்டு அகன்று போய்விடுவது.
 நேற்று தீயவனாக இருந்த ஒருவன் நாளையும் தீயவனாக இருப்பான் என்று கூற முடியாது.
 அவனிடம் உள்ள கெட்ட குணங்கள் இறந்துபோக வாய்ப்பு உண்டு.
 அந்த கெட்ட குணம் இறந்து போய்விட்டால் அவனையும்
 நல்லவன் என்று உலகம் பாராட்டும் .
 அத்தகைய பெருமை மிக்கது இவ்வுலகு என்கிறார் வள்ளுவர்.
 மாறுங்கள். மாற்றம் நடைபெற அனுமதியுங்கள்.
 பழையவை இறந்து போகட்டும்.
 குப்பையாக வாழாதீர்கள். நேற்று குப்பையாக இருந்தோம்.
 இன்று நிர்மலமாக மாறிவிட்டோம்.
 இன்று புதிதாகப் பிறந்தோம் என்ற பெருமையை அணிந்து கொள்ளுங்கள்.
 அதுதான் பெருமை. அத்தகைய பெருமையால்தான் உலகம் இன்றுவரை நிலைபெற்றிருக்கிறது.

        மாற்றம் நடைபெறுவது இயற்கை.
       மாறுவதில்தான் இருக்கிறது பெருமை.
       
    

Comments

Popular Posts