சங்க இலக்கிய நூல்கள்

            சங்க இலக்கிய நூல்கள்

சங்க இலக்கிய நூல்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டவை.

   இச்செவ்வியல் இலக்கிய பாடல்களில் இதுவரை 2381 பாடல்கள்  மட்டும் கிடைக்கப்பட்டுள்ளன.

 இப்பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை இதுவரை 473 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  பாடிய புலவர்கள் வரலாற்றை ஆராயுமிடத்து அதில் பல  தரப்பட்ட தொழில் செய்தோர், மன்னர்கள் மற்றும் பெண்பால் புலவர்கள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது.

  இவை அறப்பாடல்கள் புறப்பாடல்கள் என்ற இரண்டு பகுப்பின்கீழ் பகுக்கப்பட்டுள்ளன.ஒரு சில நூல்கள் அகம் புறம் இரண்டு கருத்தையும் உள்ளடக்கியதாகவும் உள்ளன.


   பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்  பதினெண்கீழ்க்கணக்கும் சங்க இலக்கிய பாடல்களாக கருதப்படுகின்றன.

அவை யாவை என்பதை  கீழ்க்காணும் பாடல்கள் மூலமாக அறியலாம்.

 

            எட்டுத்தொகை நூல்கள்


"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

 ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 

 கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம் புறம் என்று

 இத்தறத்த எட்டுத்தொகை"

அதாவது

  1. நற்றிணை

  2. குறுந்தொகை

  3. ஐங்குறுநூறு

  4. பதிற்றுப்பத்து

  5. பரிபாடல்

  6. கலித்தொகை

  7. அகநாநூறு

  8. புறநாநூறு

     ஆகிய இவை யாவும் எட்டுத்தொகையின் கீழ் வரும் நூல்கள்.

இவற்றுள் நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை மற்றும் அகநாநூறு  ஆகிய ஐந்தும் அகப்பாடல்களாகும்.


பதிற்றுப்பத்து மற்றும் புறநாநூறு ஆகிய இரண்டும்

புறப்பாடல்களாகும்.

பரிபாடல் அகமும் புறமும் கலந்த பாடல்களை 

தன்னகத்தே கொண்ட ஒருநூல்.


           பத்துப்பாட்டு நூல்கள்

    

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

 பெருகு வளமதுரைக் காஞ்சி _ மருவினிய

 கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

 பாலை கடாத்தொடும் பத்து."



   1.திருமுருகாற்றுப்படை

   2.பொருநராற்றுப்படை

    3. சிறுபாணாற்றுப்படை  

    4. பெரும்பாணாற்றுப்படை

   5. முல்லைப்பாட்டு

   6. மதுரைக்காஞ்சி

    7. நெடுநல்வாடை 

   8.  குறிஞ்சிப்பாட்டு

  1. பட்டினப்பாலை

  2. மலைபடுகடாம்.


இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை மற்றும்

மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை இலக்கிய வகையைச்சார்ந்தது.

   மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும்.

ஆற்றுப்படை நூல்கள் புறப்பாடல்களாகும்.

மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் வகையைச் சார்ந்தது.

 

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பாடல் வகையினவாகும்.

 

நெடுநல்வாடை என்ற நூல் மட்டும் அகமா? புறமா? என்ற

விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது.

 

             பதினெண்கீழ்க்கணக்கு


" நாலடிநான் மணிநானாற்ப தைந்திணைமுப்

  பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

   இன்னிலை காஞ்சியுடனே ஏலாதி யென்பவே

    கைநிலய வாங்கீழ்க் கணக்கு "


  1. நாலடியார்

  2. நான்மணிக்கடிகை

  3. இன்னா நாற்பது

  4. இனியவை நாற்பது

  5. திருக்குறள்

  6. திரிகடுகம்

  7. ஏலாதி

  8. பழமொழி நானூறு

  9. ஆசாரக்கோவை

  10. சிறுபஞ்சமூலம்

  11. முதுமொழிக்காஞ்சி

  12. ஐந்திணை ஐம்பது

  13. ஐந்திணை எழுபது

  14. திணைமொழி ஐம்பது

  15. திணைமாலை நூற்றைம்பது

  16. கைந்நிலை

  17. கார்நாற்பது

  18. களவழி நாற்பது


இதில் பதினொன்று நூல்கள் நீதிநூல்கள் என்ற வகைக்குள் அடங்கும்.

அகத்திணை நூல்கள் ஆறு.

களவழி நாற்பது மட்டுமே புறத்திணை நூலாகும்.


சங்க இலக்கிய நூல்கள்மூலம் பண்டை தமிழரின் 

காதல் வாழ்க்கை, போர்முறை, வீரம், ஆட்சியமைப்பு,

வணிகம் போன்ற நடப்புகளை அறிய முடிகிறது.

இதனால் இலக்கியத்தை காலக்கண்ணாடி என்று கூறுகிறோம்.

     

Comments

Popular Posts