வருமுன்னர் காவாதான் வாழ்க்கை....

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை....

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் "
                               குறள்  : 435
                               
வருமுன்னர் _ வருவதற்கு முன்னர்
காவாதான் _ காத்துக் கொள்ளாதவன்
வாழ்க்கை _ வாழ்வு
எரி _ நெருப்பு
முன்னர் _ முன்பாக
வைத்தூறு _ வைக்கோல் குவியல்
போல _ போன்று
கெடும் _ அழியும்

தவறு நிகழ்வதற்கு முன்னமே தவறு வராமல்
காத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காத்துக்
கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின்முன் 
வைக்கப்படும் வைக்கோல் போல 
அழிந்து போய்விடும்.

விளக்கம்.:

ஒரு துன்பம் வருவதற்கு முன்னர்
விழிப்புணர்வோடு இருந்து நம்மைக்
காத்துக் கொள்ள வேண்டும்.

வந்த பின்னர் வருந்தி பயனில்லை.
எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
வந்த பின்னர் பார்த்துக் கொள்வோம்
கவனமில்லாமல் இருந்தால்
எல்லா நேரங்களிலும் சூழல் நமக்குச்
சாதகமாக அமையாது.
எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
எப்போதுமே விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும்.

அப்படி விழிப்புணர்வோடு 
இருந்து நம்மைக் 
காத்துக் கொள்ளாவிட்டால்  ...
நெருப்பின்முன் வைக்கப்பட்டிருக்கும் 
வைக்கோல் எப்படி உடனடியாக
எரிந்து சாம்பலாகிப் போகுமோ 
அது போல
நம் வாழ்வும் அழிந்து போக நேரிடும்.
ஆதலால் எந்தத் தவறும் நடக்கும்முன்
விழிப்புணர்வோடு இருங்கள் என்கிறார்
வள்ளுவர்.

வருமுன் காப்போம் .
வந்தபின் கலக்கமில்லாதிருப்போம்.

English couplet : 

"His joy who guards not 'against the coming evil day
Like straw before the fire shall swift consume away"


Explanation : 

"The prosperity of him who does not timely guard
against faults will perish like straw before fire "

Transliteration:

"Varumunnark kaavaadhaan vaazhkkai Erimunnar
Vaiththooru polak  ketum"

Comments

Post a Comment

Popular Posts