உழைப்பாளர் தின நல்வாழ்த்து
உழைப்பாளர் தின நல்வாழ்த்து
விரல்களை ரணமாக்கி
வியர்வையை உரமாக்கி
கழனியைத் தெய்வமாக்கி
கஞ்சியை அமிர்தமாக்கி
தோள்களைச் சுமைதாங்கியாக்கி
தோழர்களை உறவாக்கி
உழைப்பைத் தனமாக்கி
உண்மையை நெறியாக்கி
உயர்வைப் பொதுவாக்கி
உலகை உழைப்பில் தூக்கி நிறுத்தும்
உழைப்பாளர் வர்க்கத்திற்கு
உழைப்பாளர் தின நல்வாழ்த்து!
Comments
Post a Comment