அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்....


"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு "

                                      குறள் : 72

அன்பிலார் _ அன்பு இல்லாதவர்
எல்லாம் _  அனைத்தும்
தமக்குரியர் _ தனக்கு உரியனவாகக் கொள்வர்
அன்புடையார் _ அன்பு நிறைந்தவர்
என்பும் _  எலும்பும்
பிறர்க்கு _ மற்றவர்க்கு
உரியர் _ உரிமையுடையார்

அன்பு இல்லாதவர் அனைத்துப் பொருட்களையும்
தமக்கு மட்டுமே உரிமை உடையனவாகக் கொள்வர்.
அன்புடையவர் பொருளால் மட்டுமல்லாமல்
தன் உடலாலும் பிறர்க்குப் பயன்படத்தக்கவராக
இருப்பார்.

விளக்கம் : 

பிற   உயிர்கள் மீது அன்பு இல்லாதவர் எல்லா
பொருளும் தனக்கு மட்டுமே உரியதாக 
எண்ணி தான் மட்டுமே துய்த்துக் கொண்டிருப்பார்.
பிறர்க்குக் கொடுத்து இன்பம் காண வேண்டும்
என்ற பண்பு அவரிடம் சிறிதும் 
காணப்படாது.
தன் உடன்பிறப்புகளுக்குக்கூட கொடுத்து 
உதவும் மனம் இருக்காது.

ஆனால் உயிர்கள்மீது அன்பு கொண்டவர்
பொருளால் பிறர்க்கு உதவி செய்வார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளமாட்டார்.
தனது உடலாலும் பிறர்க்கு உதவி செய்து
மகிழ்ச்சி காண்பர்.
தனது உடல், பொருள் , ஆவி அனைத்தையும்  
பிறர்க்கு  ஈந்து வாழும் நற்பண்பு 
அன்புடையவர்களிடம் மட்டுமே காணப்படும்.

பிறர்மீது அன்பு இருக்கும் ஒருவரால்தான்
இடர் ஏற்படும் காலங்களில் ஓடிச்சென்று
உதவ முடியும்.
அன்பில்லாதவர் அத்தகைய நேரங்களில்
ஓரமாக நின்று
வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர்.

அன்பு துன்பம் கண்டவிடத்து உயிரையும்
பொருட்படுத்தாது உதவ முன் வந்து நிற்கும்.

மனதில் அன்பு இல்லாதவன் இரக்கம்,
கருணை எதுவுமே இல்லாது வற்றல்
மரத்திற்கு ஒப்பாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

அன்பு தனக்குரிவை எல்லாவற்றையும்  பிறர்க்கும்
கொடுத்து பிறரையும் தான் வாழ்வதுபோல்
வாழவைக்கும்.

அன்பு தன்நலம் பாராது.
அன்பில்லாதவனிடம் பொதுநலம் இராது.


English couplet : 

The loveless to themselves belong alone; The loving men
are others'  to the very bone.

Explanation :

Those who are destitute of love appropriate all they
have to themselves, but those who possess love
consider even their bones to belong to others.


Transliteration :

"Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar
Enpum Uriyar pirarkku "

Comments

Popular Posts