அன்னமிட்டகை
அன்னமிட்டகை
பெற்றோர் பெயர் சொல்ல
கற்ற கல்வி உற்ற துணையிருக்க
பெற்ற பதவி பேரருளால் வந்திருக்க
நித்தம் பசியென வாடுவோர்
கண்முன் வந்து நிற்க
பசிப்பிணி போக்கிடும்
வைத்தியன் யானிருக்க
புசிப்பதற்கு இல்லை
என்ற நிலை இல்லையாகுகவென
யாசிப்பதற்கு முன்பே யோசிக்காது
மும்பைவாசிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய
அன்பு உள்ளங்கள் நினைவு
ஞாலம் உள்ளவரை
எம் நெஞ்சில் நிறைந்திருக்கும்
அய்யா அன்பழகன் அன்னமிட்டகை தொட்டு
எம்கரம் என்றும் வணங்கி நிற்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும்
கணியன் பூங்குன்றன் வாக்கை
நெஞ்சில் நிறுத்தி உதவிடும் பாங்கை
நாளைய வரலாறு பேசும்
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
வாழும் மனிதருக்கெல்லாம்
எனும் மந்திரத்தைக் கையிலெடுத்து
நற்சோறு உண்டிட வழி செய்தீர்
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது எனும்
குறள் உமக்கு மகுடம் சூட்டி
காலமெல்லாம் வாழ்த்தி நிற்கும்.
Comments
Post a Comment