ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்...
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்....
"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ் "
குறள் : 156
ஒறுத்தார்க்கு _ தண்டித்தவருக்கு
ஒருநாளை _ ஒரே ஒருநாள்
இன்பம் _ மகிழ்ச்சி
பொறுத்தார்க்கு _ பொறுத்துக் கொண்டவருக்கு
பொன்றும் _ அழியும்
துணையும் _ அளவும், காலம் வரை
புகழ் - இசை, புகழ்ச்சி
தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்களுக்கு
அன்று ஒருநாள் மட்டுமே இன்பம்.
ஆனால் பொறுத்தவர்களுக்கோ உலகம்
அழியும்வரை புகழ் உண்டு.
விளக்கம்:
தீமை செய்தவரைத் தண்டித்தவருக்கு
அந்த ஒருநாள்
மட்டுமே மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
நான் நினைத்ததை முடித்துவிட்டேன்
என்பதைச் சொல்லிச் சொல்லி
மகிழலாம்.
அந்த ஒருநாளோடு அந்த மகிழ்ச்சி
காணாமல் போய்விடும்.
ஒருவர் செய்த தீமையைப் பொறுத்துக்
கொள்ளும் பொறுமைசாலிகளை உலகமே
கொண்டாடும்.
உலகம் உள்ளவரை ஒவ்வொருவர்
உள்ளங்களிலும் அவர்கள் பற்றிய
மதிப்பு உயரந்து கொண்டே இருக்கும்.
உயிர் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும்.
தீமை செய்தவனுக்குத் தீமை செய்துவிட
வேண்டும் என்று நினைப்பது இயல்பாகவே
மனித மனதில் எழும் செயல்தான்.
" கண்ணுக்குக் கண் ;பல்லுக்குப்பல்"
இப்படி முந்தி வந்து தண்டனை கொடுத்துவிட
வேண்டும் என்பது ஆத்திரக் காரர்கள்
எழுதி வைக்கும் தீர்ப்பு.
பூமியைப் போல் பொறுமையாக
இருக்க வேண்டும்.
பொறுத்தார் பூமி ஆள்வார்
பொங்கினார் காடாள்வார்.
பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது
தோல்வி நம்மை நோக்கி நடைபோடத்
தொடங்கிவிடும்.
தீமை செய்தவருக்குத் தண்டனை
கொடுப்பதை விட்டுவிட்டு
மன்னித்து மறந்து விடுவோமானால்
காலம் முழுக்க மகிழ்ச்சியில் வாழலாம்.
English couplet :
Who wreak their wrath have pleasure for a day, who
bear have praise till earth shall pass away.
Explanation :
The pleasure of the resentful continues for a day .
The praise of the patient will continue until the final
destruction of the world.
Transliteration :
"Orutharakku Orunaalai Inpam poruththaarkkup
Pondrun Thunaiyum pukazh "
Comments
Post a Comment