பொங்கல் வாழ்த்து

  பொங்கல் வாழ்த்து

தைமகள் கடைக்கண் திறப்பால்
 வையகம் எங்கும்  செழிப்பால்

உழவன் செய்த உழைப்பால்
கழனி எல்லாம் பயிர்வனப்பால்

நிறைகதிர் கண்ட களிப்பால்
பிறைமதியார் உள்ளம் பூரிப்பால்

சுனையாகும் இன்பத் திருப்பால்
மனையில்  நிலவும் களிப்பால்

சொல்லரும் பொருட் குவிப்பால்
நல்லறம் நடக்கும் பேரன்பால்

பழையன மறவா பண்பால் 
பண்பாட்டைத் துறக்காச் சிறப்பால்

தமிழ்ப்பால் கொண்ட விருப்பால்
அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால்

பொருட்பால் கிடைத்த மலைப்பால்
இன்பத்துப்பால் நுகர்வீர் உள்ளன்பால்

ஆதவன் சிரிப்பால் ஆவின்பால்
பொங்கல் காணும்  உவப்பால்

இனிப்பால்   கரும்பின் சுவைப்பால்
இணைப்பால் கரம் குவிப்பால்

இறைவன்பால் கொண்ட பிணைப்பால்
இல்லம்பால் பொங்கட்டும் மகிழ்ச்சிப்பால்!


Comments

  1. Superb. Wish you Happy Pongal Tr.

    ReplyDelete
  2. மிக அருமை.அன்பான இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts