தெய்வத்தான் ஆகா தெனினும்....

தெய்வத்தான் ஆகா தெனினும்....
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் "
                        குறள் : 619
                        
தெய்வத்தான் _ விதி வசத்தால்
ஆகாதெனினும் _ கருதிய பலனைத் தராவிட்டாலும்
முயற்சி _ செய்த முயற்சியானது
தன் _ தனது
மெய் வருத்த _ உடல் வருந்திய வருத்தத்தின்
கூலி _ பலன்
தரும் _ கொடுக்கும்

நாம் முயன்ற செயல் விதி வசத்தால்  கருதிய
பலனைத் தராவிட்டாலும்  நமது முயற்சியானது
உடல் வருந்தி உழைத்த உழைப்பின் 
பலனைக் கொடுத்தே  தீரும்.

விளக்கம் :

பல நேரங்களில் நாம் கடினமாக உழைத்திருப்போம்.
நாம் எதிர்பார்த்த அளவு பலன் கிடைத்திருக்காது.
எவ்வளவுதான் உழைத்தாலும்
போதிய அங்கீகாரம் இல்லையே
என சோர்ந்து போய்விடுவோம்.
அப்படிச் சோர்வடையத் தேவை இல்லை.
உங்கள் உடல் உழைப்பு ஒருபோதும்
வீண் போகாது.
செய்த உழைப்புக்குத் தக்க பலன்
கிடைத்தே தீரும்.

விதியை நம்பி இராமல் உழைத்துக்
கொண்டே இருங்கள்.
விதியால் எப்போதும் நம்மைப் புறந்தள்ளிவிட
முடியாது.
ஊழ்வினை ஒரு முறை இருமுறை பலன்தராமல்
விலக்கும்.
ஆனால் தளராத உழைப்பின்முன் ஊழ்வினையும்
தோற்றுப் போகும்.
 
அதனால் முயற்சியைக் கைவிடாமல்
உழைத்துக் கொண்டே இருங்கள்.
உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"Though fate- define should make your labour vain;
Effort its labour's sure reward will gain "

Explanation :

Although it be said that , through fate , it cannot be attained,
yet labour , with bodily exertion , will yield its reward.

Transliteration :

"Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak kooli Tharum "

Comments

Popular Posts