பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
தென்தமிழகத்தின் திருநகராம்
நெல்லை யகமது உறை
செங்குளம் சிறப்புடை நாட்டார்
மதிப்புடன் மிளிர்வதற்கு
வான்உலா மதியைப் போல
வந்துதிந்த தேனிலா பால் பொன்னுத்தாய்
கோநகர் மும்பை மாநகராட்சிக்கு
மணிமுடியாய் அழகு தந்தார்!
ஐயாறு ஆண்டுகளாய்
ஆற்றிய பணிகள் யாவும்
தூண்டிய விளக்கைப்போல
சுடரொளி பரப்பி நிற்க
தோண்டிய ஊற்றின் நீராய்
உயர்ச்சி நாளும் வந்து சேர
ஈண்டு பால் கொண்ட உழைப்பு
எஞ்ஞான்றும் எம்மைப் பேச வைக்கும்!
அறப்பணியை திருப்பணிசெய்
அர்ப்பணிப்பாய் நடத்தியதால்
போற்றிடும் பதவிகள் தேடி வந்து
பொன் உனக்கு பொலிவு தர
ஏற்றிடும் பணி என்றென்றும்
உன் நாமம் உச்சரிக்க
சாற்றிடும் பாமாலை இன்று
ஏத்திடும் புகழாய் உம்மோடு நிற்கும் !
அறப்பணி ஆற்றிட வந்து
தொய்வல்லா தொடர் உழைப்பால்
சிகரம் தொட்டு இன்று களப்பணி
கடுமையை இறக்கி வைத்து
பகரவொண்ணா மகிழ்ச்சியில்
தளைநீக்கி பறக்கும் சிறுபுள்ளாக
பறந்தின்பம் தரு ஓய்வு கிடைக்க
பணி நிறைவின் மகிழ்வு கண்டாய்!
தொய்வில்லா பணி செய்து
ஓய்வென்னும் பருவம் கண்டாய்
தூயநன் நெறி நின்று
துயரற நீடு வாழ
தூயநல்ல இறைவன்
தொடரருள் புரிந்திட
நட்புடன் கூடி வந்து
நல்வாழ்த்து கூறுகிறோம்!
Comments
Post a Comment