செவியின் சுவையுணரா வாயுணர்வின்.....

செவியின் சுவையுணரா வாயுணர்வின்....


செவியின் சுவையுணரா  வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் "
                    குறள் :  420
                    
செவியின் சுவை _ கேள்வி அறிவின் சுவை
உணரா _ உணர்ந்து கொள்ளாத
வாய்   _ வாயினால்
உணர்வின் _ உணரப்படும் சுவைகளை அறிந்த
மாக்கள் _ பகுத்தறிவற்ற மக்கள்
அவியினும் _ இறந்தாலும்
வாழினும் _       வாழ்ந்தாலும் 
என்  _ என்ன பயன்?

வாயால் உணரப்படும் சுவைகளை அறிந்து, செவியால்
உணரப்படும் சுவைகளை அறியாத மாந்தர்
இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு எந்த
பயனும் இல்லை.

விளக்கம் :

செவியால் உணரப்படும் சுவை சொற்சுவை, 
பொருட்சுவை என இருவகைப்படும்.
சொற்சுவை என்பது குணம் மற்றும்
அலங்காரம் போன்றவற்றைக் குறிக்கும்.

பொருட்சுவையாவன நகை, அச்சம், இழிவரல்,
உவகை ,பெருமிதம், கோபம், வியப்பு,  கருணை, சாந்தம்
என்பனவாம்.
இவற்றை நாம் கேட்டு உணரலாம். அதனால்
இவை யாவும் செவிச்சுவையின் பாற்பட்டது.

வாயுணர்வு என்பது நாம் வாயால் உண்ணும்
உணவின் சுவையான கைப்பு, கார்ப்பு, 
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு , துவர்ப்பு
என்னும் அறுவகை சுவைகளாகும்.

செவிச்சுவை அறியாமல் வாயுணர்வு மட்டுமே பெரிதாக
எண்ணி வாழ்பவர்கள் இருந்தாலும் 
இல்லாமல் போய்விட்டாலும்
உலகிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை
என்கிறார் வள்ளுவர்.

 English couplet :

His mouth can taste , but ear no taste of joy can give
What matter if he die or prosperous live?

Explanation :

What does it matter whether those men live or die
who can judge of tastes by the mouth and not by the ears.?

Transliteration : 

"Seviyir Suvaiyunaraa Vaayyunarvin Maakkal
Aviyinum vaazhinum En?"

Comments

Popular Posts