நிறைநீர நீரவர் கேண்மை....


நிறைநீர நீரவர் கேண்மை......

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு  
                               குறள் :  782


நீரவர் _ அறிவுடையவர்
கேண்மை _ நட்பு
பிறை     -   வளர்பிறை
நிறைநீர _ நாளும் 
                       வளருவது போல
பேதையார் _ அறிவில்லாதவர்
நட்பு _           நட்பானது
மதி  _    நிலவு
பின்நீர _ பின் நாளில் 
                   தேய்ந்து போவது போல


அறிவுடையவர்களோடு கொள்ளும் நட்பு
வளர்பிறை போல நாளும் வளர்ந்து
கொண்டே இருக்கும்.
அறிவில்லாதவரோடு கொள்ளும் நட்பு
தேய்பிறை போல நாளும் தேய்ந்து
ஒருநாள் காணாமல் போய்விடும்.

விளக்கம் :

வளர்பிறையானது ஆரம்பத்தில் சிறிதாகவே
இருக்கும். நாளாக ஆக வளர்ந்து
கொண்டே இருக்கும்.
அதுபோல அறிவுடையவர்களோடு
கொள்ளும் நட்பும் ஆரம்பத்தில் சிறிதாக
இருந்தாலும் நாளுக்குநாள் அதிகரித்துக்
கொண்டே இருக்கும்.

மாறாக அறிவில்லாதவர்களோடு கொள்ளும்
நட்பானது முதலில் முழுமதிபோல்
பெரிதாகத் தெரியும்.பின்னர்  நாளுக்கு நாள்
தேய்ந்து கொண்டே சென்று ஒருநாள்
காணாமலேயே போய்விடும் .
அதாவது தேய்பிறை தேய்ந்து 
 ஒருநாள் காணாமல் போய்விடுவதுபோல
காணாமல் போய்விடுமாம்.

அறிவுடையவர்களோடு கொள்ளும் நட்புக்கு
வளர்பிறையையும்
அறிவில்லாதவர்களோடு கொள்ளும் நட்பு 
தேய்பிறையையும்  உவமைகளாகக்
கூறியுள்ளார் வள்ளுவர்.
 
இதன்மூலம்  யாரோடு நட்பு
கொள்ளல் நன்று என்பதைப்
உய்த்துணர்ந்து கொள்க
என்று உணர்த்தப்பட்டுள்ளது.

பேதையார் என்பதற்கு உய்த்துணரும்
அறிவில்லாது  தாம் எண்ணுவது மட்டுமே
உண்மை என்று முரட்டுப்
பிடிவாதம்  கொண்டிருப்பவர்
என்ற பொருளும் உண்டு.
அவர்களால்தான் பிறரோடு நெடுநாள்
தமது நட்பைத் தொடர முடியாது.
தமது முரட்டுப் பிடிவாதத்தால் யாரோடும்
ஒத்துப் போக மாட்டார்.
இந்த மனநிலை கொண்டவரோடு
கொள்ளும் நட்பு நீடிக்காது.

நீரவர் என்பது இனிமையான
பண்பு நலன்கள் கொண்டவர்
என்று பொருள் கொள்ளப்படும். 
இனிமையான பண்பு நலன்
கொண்டவர்கள் அனைவரோடும்
இணக்கமாக நடந்து கொள்வர்.
இத்தகைய பண்பு கொண்டவரோடு
 நட்பு வைத்துக் கொள்வது நெடுநாள்
 நிலைத்து என்றும் இனிமை
 தருவதாக  தொடர்ந்து கொண்டே வரும்.

நல்லவர்களோடு கொள்ளும் நட்பு
என்றும் வளரும்.
தீயவர்களோடு கொள்ளும் நட்பு
காணாமல் போய்விடும்.

English couplet :

"Friendship with men fulfilled of good waxes
like the cresent moon; Friendship with men of foolish mood,
Like the full orb, waneth soon "

Explanation :

The friendship of the wise waxes like the new moon,
But that of fools wanes like the full moon.

Transliteration :

"Niraineera Neeravar Kenmai Piraimadhip
Pinneera Pedhaiyar Natpu"


Comments