ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க...
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க...
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை "
குறள் : 656
ஈன்றாள்-பெற்றெடுத்தத் தாய்
பசி- பசி
காண்பான்- காண்பவனாக
ஆயினும்- இருந்தாலும்
செய்யற்க- செய்யாதிருப்பீராக
சான்றோர் - உயர்ந்தோர்,மேலானவர்
பழிக்கும்- தூற்றுதற்குரிய
வினை - செயல்
பெற்ற தாய் பசியால் துடிப்பதைக் கண்டாலும்
அத்துன்பத்தைப் போக்குவதற்காக
சான்றோர்களால் தீயது என பழித்து
ஒதுக்கப்பட்ட செயல்களை ஒருபோதும்
செய்தல் கூடாது.
விளக்கம்:
பசி மிகவும் கொடியது.
ஒருசாண் வயிற்றுக்காகத்தான் இந்த ஓட்டமும்
ஓயா உழைப்பும்.
பசி என்று ஒன்று இல்லை என்றால்
பல தீயச்செயல்கள் நாட்டில் நடைபெறாது.
மனைவி மக்களின் பசியைப் போக்க
களவு செய்தேன் என்று சிலர்
ஒப்புதல் வாக்குமூலம் சொல்வதைக்
கேட்டிருக்கிறோம்.
என் மனைவிக்காக
என் பிள்ளைக்காக
என் உடன்பிறப்புக்காக
இப்படி தன் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக
வைப்பதற்காகத்தான் தீய வழிகளில் பணம் ஈட்ட
முனைகின்றனர்.
இது தீது.பெரியோரால் வெறுத்து
ஒதுக்கத்தக்க செயல்.
கண்முன் தாய் பசியால் வருத்திக் கிடப்பதை
பிள்ளைகளால் பொறுத்துக்கொள்ள முடியாது.
அதற்காக தீய செயல்களில் ஈடுபட்டு தாயின்
பசியைப் போக்க முனையலாம்.
தாயே பசியால் இருந்தாலும்...
என்று சொல்லப்பட்டிருப்பதால் வேறு எதற்காகவும்
யாருக்காகவும் பெரியோர் தீயது என ஒதுக்கிய
செயலைச் செய்யலாகாது என்பது
இப்பாடல் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
தன்னைப் பெற்ற தாயே பசியால் வாடினாலும்
அந்தப் பசியைப் போக்குவதற்காக
சான்றோர் தூற்றுப்படியான தீயச் செயல்களில்
ஈடுபடுபடக்கூடாது என்கிறார் வள்ளுவர்.
Translation:
"Though her that bore thee hung'rying thou behold
no deed do thou
that men of perfect soul have crime decreed"
Explanation:
Do not do what what the wise condemn
Even to save your starving mother.
Transliteration:
"Eendraal pasikaanpaan aainumj cheyyarkka
Saandror pazhikkum vinai"
Comments
Post a Comment