மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு....
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு....
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் "
குறள் :942
மருந்தென- மருந்து என்று ஒன்று
வேண்டாவாம் - வேண்டியதில்லை
யாக்கைக்கு - உடம்புக்கு
அருந்தியது- உண்டது
அற்றது- செரித்தது
போற்றி- கவனித்து
உணின்- உண்டால்
முன்பு உண்ட உணவு செரிப்பதற்கான
கால இடைவெளி தந்து உணவு உண்பவர்களின்
உடலுக்கு மருந்து என்று ஒன்று
தேவையில்லை.
விளக்கம் :
உண்ட உணவு செரித்துவிட்டது
என்பதை அறிந்த பின்னர்
மறுபடியும் உண்ண
வேண்டும்.
கிடைக்கிறது என்று வயிறு
முட்ட மறுபடியும் மறுபடியும்
உண்ணுதல் கூடாது.
உணவு செரிக்கும் நடைபெற
போதிய இடைவெளி இல்லாது
உணவு உண்டால் செரிமானம் சீராக
நடைபெறாது.
செரிமானம் சீராக நடைபெறாவிட்டால்
வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும்.
எல்லா சிக்கல்களும் முதலாவது வயிற்றிலிருந்து தான்
தொடங்கும்.
உணவு சிக்கல் தராதிருந்தால் உடலிலும்
சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்காது.
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி
அறிந்து அதன் பின்னரே உண்ணுங்கள்.
அதுதான் நோய் வராமல்
நம்மைப் பாதூகாக்கும்.
மருந்தே வேண்டாம் . உணவு உண்ணும்
முறையை மட்டும் கடைபிடித்தால் போதும்.
நோயில்லா வாழ்க்கை வாழ வேண்டுமா?
இதுதான் ஒரே வழி என்கிறார் வள்ளுவர்.
English couplet:
"No need of medicine to heal your body's pain,
if what you ate before digested well, you eat again"
Explanation :
No medicine is necessary for him who eats after
assuring himself that what he has already
eaten has been digested.
Transliteration:
"Marundhena ventaavaam yaakkaikku arundhiyadhu
Arundhu potri unin"
Comments
Post a Comment