திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து


இமைபோல் இணைந்து
இமயம்போல் உயர்ந்து
உடலும் உயிரும்போல்
ஒரு கூட்டில் குடியிருந்து
ஆல்போல் தழைத்து
அறுகுபோல் வேரூன்றி
மூங்கில்போல் சுற்றம் சூழப்
பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ
வாழ்த்துகிறோம் நிறைவாக!
வாழும் நாட்கள் வரமாக
வாழ்வாங்கு வாழ்வீர் 
என்றென்றும் இணையாக!                -   செல்வபாய் ஜெயராஜ்

Comments